“கெடாவில் பிஎன்னுக்கு இந்தியர்களின் ஆதரவு 80 விழுக்காடு உயர்ந்துள்ளது”

கெடா மாநிலத்தில் பாரிசான் நேசனலின் தலைமைத்துவதற்கு இந்திய சமூகத்தின் ஆதரவு 80 விழுக்காட்டிற்கு மேல் உயர்ந்துள்ளது என்று மாநில பாரிசான் தலைவர் அஹ்மாட் பாஷா முகமட் ஹனிபா கூறினார்.

அந்த அளவிலான ஆதரவுடன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் மாநிலத்தை எதிர்கட்சியிடமிருந்து பிஎன் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக அவர் கூறினார்.

“குறிப்பிடத்தக்க அளவில் இந்திய சமூகம் பிஎன் பக்கம் திரும்பி இருக்கிறார்கள் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருப்பதால், பிஎன் வெற்றி பெறும் என்று நான் எனது உத்தரவாதத்தை அளிக்கிறேன்”, என்று இன்று தைப்பூச கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

-பெர்னாமா