பாஸ் தன்னைப் பற்றி திரெங்கானு மந்திரி புசார் அஹமட் சைட் கூறியுள்ள கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கு மூன்று நாள் அவகாசமும் அளித்துள்ளது.
பாஸ்“மார்க்கத்திலிருந்து விலகிச் செல்லும் போதனைகளைக் கொண்ட கட்சி” என்று அஹமட் சைட் கூறியதாக நாளேடு ஒன்றில் செய்தி வெளிவந்துள்ளதாகக் கூறிய பாஸ் மத்திய செயல்குழு உறுப்பினர் அபு பக்கார் சிக், அதை அவர் திரும்பப் பெறவில்லை என்றால் அவருக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றார்.
“அது ஒரு கடுமையான குற்றச்சாட்டு”, என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
அஹமட் புதன்கிழமை கிஜாலில் 1மலேசியா மக்கள் உதவித்திட்டத்தின்கீழ் உதவி வழங்கியபோது அவ்வாறு கூறினாராம்.
-பெர்னாமா