பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
‘துரோகி’ நஷாருடின் எம்பி பதவியைத் துறக்க வேண்டும்
பாஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் நஷாருடின் மாட் ஈசா சவூதி அரேபியாவில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் காணப்பட்டதாலும் ஹுடுட் மீதான பாஸ் நிலை பற்றிக் கேள்வி எழுப்பியதாலும் பாச்சோக் எம்பி பதவியைத் துறக்க வேண்டும் என கிளந்தான் பாஸ் இளைஞர் பிரிவு வலியுறுத்தியுள்ளது. "அவர் பாஸ்…
சபா பாஸ்: ஆர்சிஐ குழுவில் இரண்டு புத்தக ஆசிரியர்கள் இடம்…
சபா மக்கள் தொகைப் பெருக்கம் மீது விரிவாக எழுதியுள்ள புத்தக ஆசிரியர்கள் இருவர் அந்த மாநில சட்ட விரோதக் குடியேற்றக்காரர் பிரச்னையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என சபா மாநில பாஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. அந்த…
பாஸ்: ஹுடுட் மீதான அம்னோ நிலை டிஏபி-யை விட மோசமானது
அம்னோவிடம் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை அமலாக்குவதற்கான அரசியல் அதிகாரம் இருந்த போதும் அந்தக் கட்சி அதனைச் செய்யத் தவறி விட்டதாக பாஸ் கட்சி குறை கூறியுள்ளது. "மலேசியாவில் உள்ள முஸ்லிம்களையும் பாஸ் கட்சியையும் பொறுத்த வரையில் அம்னோ ஹுடுட் சட்டத்தை நிராகரித்துள்ளது டிஏபி-யைக் காட்டிலும் மோசமானதாகும். ஹுடுட் சட்டத்தை…
முன்னாள் துணைப் பிரதமரின் புதல்வர் தாம்ரின் காபார் பாஸ் கட்சியில்…
முன்னாள் அம்னோ தலைவரும் முன்னாள் துணைப் பிரதமர் காபார் பாபா-வின் புதல்வருமான முகமட் தாம்ரின் காபார் பாஸ் கட்சியில் ஆயுள் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பத்தை அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங்-கிடம் நேற்றிரவு கோம்பாக் தாமான் மெலேவாரில் பாஸ் அலுவலகத்தில் சமர்பித்தார். பாஸ் கட்சியில் சேருவது பற்றித் தாம்…
பாவ்சி: பாஸ் கட்சியின் மூன்று உயர் தலைவர்கள் என்னை அழைத்தனர்
பாஸ் கட்சியில் இணையுமாறு அதன் உயர் தலைவர்களே அழைத்த பின்னரே தாம் அதில் சேர முடிவு செய்ததாகவும் ஆனால் உடனடியாக அல்ல என்றும் முன்னாள் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் பாவ்சி ஷாரி கூறுகிறார். பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், துணைத் தலைவர் மாட்…
ஹுசாம்: கிளந்தானில் எண்ணெய் இல்லை என்றால் குழு ஏன்?
கிளந்தானில் எண்ணெய் வளங்கள் இல்லை என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஏற்கனவே அறிவித்து விட்டதால் கிழக்குக் கரை மாநிலங்களுக்கான எண்ணெய் உரிமப் பண விவகாரத்தை ஆய்வு செய்ய ஒரு குழுவை கூட்டரசு அரசாங்கம் அமைத்துள்ளது குறித்து அந்த மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் ஹுசாம் மூசா கேள்வி…
எண்ணெய் உரிமப் பணக் கூட்டத்தில் பாஸ் பேராளர் பங்கு கொள்ள…
கிளந்தான் மாநிலத்துக்கான எண்ணெய் உரிமப் பணம் மீது விவாதம் நடத்துவதற்கு பேராளர் ஒருவரை அனுப்புமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பாஸ் வழி நடத்தும் கிளந்தான் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த மாநில மந்திரி புசார் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் அதனை இன்று அறிவித்தார். நிக்…
பாஸ்: ‘மலாய் நிலம் விற்கப்பட்டதை அம்னோ இளைஞர்கள் எதிர்ப்பார்களா ?”
பினாங்கு பாலிக் புலாவ்-வில் மலாய் சமூகத்துக்குச் சொந்தமான நிலத்தை கொழுத்த ஆதாயத்திற்கு விற்றதாக கூறப்படும் தனது இரண்டு தலைவர்களுக்கு எதிரான தனது நிலையை அம்னோ இளைஞர் பிரிவு அறிவிக்க வேண்டும் என பினாங்கு பாஸ் இளைஞர் பிரிவு சவால் விடுத்துள்ளது. மலாய் சமூகத்தை அலட்சியம் செய்வதாக பினாங்கு அரசாங்கத்தை…
ஏஜியைத் தூண்டிவிட முயல்கிறாரா கைரி?
ஏப்ரல் 28பேரணியில் இழைக்கப்பட்ட குற்றச்செயல்களுக்குப் பொறுப்பேற்கும் கடப்பாட்டிலிருந்து பெர்சே விடுவிக்கப்படவில்லை என்று அம்னோ இளைஞர் தலைவர் ஜமாலுடின் அபு பக்கார் கருத்துத் தெரிவித்திருப்பது சட்டத்துறைத் தலைவ(ஏஜி)ரின் பணியில் குறுக்கிடுவதற்கு ஒப்பாகும். சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரம் ஏஜிக்கு மட்டுமே உண்டு என்று பாஸ் கோலா சிலாங்கூர் எம்பி சுல்கிப்ளி…
பாஸ் இஸ்லாமிய சித்தாந்தத்தை கைவிட தயாரா?, ஹிண்ட்ராப் சவால்
மலேசியாகினி மின்னூடக செய்தி அகப்பக்கத்தில் பாஸ் கட்சியின் கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் சித்தி மரியா, ஹிண்ட்ராப் இயக்கத்தை இனவாரி அமைப்பு என பொருள் படும் வகையில் கருத்து வெளியிட்டிருப்பதை நாங்கள் வன்மையாக எதிர்த்து கண்டிக்கிறோம். இந்திய வாக்காளர்களை சாமானியர்களாக கருதும் போக்கை பாஸ் மற்றும் பக்காத்தான்…
சிலாங்கூர் பாஸ்: சினிமா விதிமுறை ஹுடுட் சட்டங்களின் தொடக்கம் அல்ல
திருமணமாகாத முஸ்லிம் ஜோடிகள் சினிமா அரங்குகளில் தனித்தனியாக அமர்ந்து படம் பார்க்க வேண்டும் என கோலா சிலாங்கூர் மாவட்ட மன்றம் விதித்துள்ள புதிய விதிமுறை, பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்வதைத் தடுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. ஹுடுட் அல்லது இஸ்லாமியச் சட்டங்களை அமலாக்குவதற்கான தொடக்கம் அல்ல என சிலாங்கூர்…
பேராக்கை பிஎன் கைப்பற்றுவதில் முக்கிய பங்காற்றிய அரசு ஊழியர் பாஸ்…
2009ம் ஆண்டு பேராக் மாநில அரசாங்கத்தை பிஎன் கைப்பற்றுவதில் முக்கியப் பங்காற்றிய முன்னாள் பேராக் மாநிலச் சட்டமன்ற செயலாளர் அப்துல்லா அந்தோங் சாப்ரி அரசு சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பாஸ் கட்சியில் சேருவதற்கு முடிவு செய்துள்ளார். ஈப்போவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய பாஸ் உறுப்பினர்களை வரவேற்பதற்காக நடத்தப்பட்ட…
ஹாடி: பக்காத்தானில் மிகவும் வலுவானது பாஸ் கட்சியே, டிஏபி அல்ல
அடுத்த பொதுத் தேர்தலில் டிஏபி அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் எனச் சொல்லப்படுவதை பாஸ் கட்சி தலைவர் அப்துல் ஹாடி அவாங் நிராகரித்துள்ளார். பக்காத்தான் ராக்யாட் கூட்டணியில் அந்த இஸ்லாமியக் கட்சியே வலிமை வாய்ந்தது என அவர் சொன்னார். டிஏபி-யைக் காட்டிலும் கூடுதலான இடங்களில் பாஸ் போட்டியிடும் என்றும்…
தைப்பூசம் பற்றி சலாஹுடின் கூறியதில் மஇகா சர்ச்சை ஏன்?
-செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன், ஜூன் 26, 2012. தைப்பூசம் அல்லது இந்து மதம் குறித்து தாம் எவ்விதக் குறைகூறல்களையும் வெளியிடவில்லை என்று பாஸ் துணைத் தலைவர் சலாஹுடின் அயுப் கூறியுள்ளார். கண்ணீர்ப்புகையைப் பயன்படுத்தாமல் பேரணிகளை அமைதியான முறையில் நடத்த முடியும் என அவர் கூறியுள்ளார். பாலிங் ஆர்ப்பாட்டம், தைப்பூச…
‘ஆர்ப்பாட்டங்கள் ஹராம் என இஸ்லாமிய சட்டம் சொல்லவில்லை’
ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணிக்குப் பின்னர் சில ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்வது முஸ்லிம்களுக்கு ஹராமானது என தேசிய பாத்வா மன்றம் பிரகடனம் செய்துள்ளதற்கு எதிராக பாஸ் கட்சியின் வலிமை வாய்ந்த சூரா ( syura ) மன்றம் சவால் விடுத்துள்ளது. சமய அறிஞர்களும் கட்சி உயர்…
தேர்தல் தேதி ரகசியம் மீது ஹாடி பிஎன்-னைச் சாடுகிறார்
அடுத்த பொதுத் தேர்தலுக்கான தேதியை தனது பிடிக்குள் வைத்திருக்கும் பிஎன் -னை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சாடியுள்ளார். சர்வாதிகார நாடுகள் மட்டுமே நடப்பு அரசாங்கத்தில் வெற்றியை உறுதி செய்வதற்கு அப்படி இயங்கும் என அவர் சொன்னார். "ஒரே கட்சி முறையை பின்பற்றும் நாடுகள்-குறிப்பாக முன்னாள் கம்யூனிஸ்ட்…
ஹாடி: பக்காத்தான் மலாய் முஸ்லிம் பிரதமரை நியமிக்கும்
எதிர்த்தரப்புக் கூட்டணியான பக்காத்தான் ராக்யாட் அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் மலாய் முஸ்லிம் ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவார் என பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்இன்று கூறியிருக்கிறார். நியமிக்கப்படும் தலைவர் அதிகமான செல்வாக்கைக் கொண்ட பிரிவைச் சேர்ந்த தனிநபராக இருக்க வேண்டும் என்று கூறிய அவர், இந்த…
பாஸ்: 13வது பொதுத் தேர்தல் சுனாமி அலை தெற்கிலிருந்து வீசும்
13வது பொதுத் தேர்தலில் ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் ஆகியவற்றில் பக்காத்தான் ராக்யாட் கூடுதல் இடங்களைப் பெற்று தெற்கிலிருந்து சுனாமி அலை வீசத் தொடங்கும் என பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி ஆரூடம் கூறியுள்ளார். 2008ல் கைப்பற்றிய மாநிலங்களை பக்காத்தான் தக்க வைத்துக் கொள்வதுடன் பேராக், திரங்கானுவிலும்…
பாஸ் இளைஞர்கள் என்எஸ்டி அலுவலகத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம்
பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட்-டை 'father of kafir' எனக் கூறி வெளியிட்ட செய்திக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் பொருட்டு அந்தக் கட்சியின் இளைஞர் பிரிவு உறுப்பினர்கள் இன்று கோலாலம்பூர் பங்சாரில் அமைந்துள்ள என் எஸ்டி என்ற நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கைத்…
பாஸ் கட்சி, ‘father of kafir’ செய்தி தொடர்பில் NST-க்கு…
நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் நாளேடு, பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர் நிக் அஜிஸ் நிக் மாட்-டை 'father of kafir' ( மத நம்பிக்கையற்றவர்களின் தந்தை) என அழைத்து வெளியிட்ட செய்தி தொடர்பில் அதற்கு அழுத்தம் கொடுக்கும் பொருட்டு பாஸ் இளைஞர் பிரிவு பங்சாரில் உள்ள அந்த ஆங்கில…
ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் பாஸ் தள்ளி வைக்கிறது; ஜுன் முதல்…
பாஸ் கட்சி அடுத்த மாதம் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முக்தாமார் எனப்படும் தனது ஆண்டுப் பொதுக் கூட்டத்தை நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது. 13வது பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தும் பொருட்டு அவ்வாறு தள்ளி வைக்கப்படுவதாக கட்சியின் தலைமைச் செயலாளர் முஸ்தாப்பா அலி கூறினார். அதற்குப் பதில்…
அம்னோவுடன் கலந்துரையாடல் (muzakarah) கிடையாது என்கிறார் ஹாடி
அம்னோவுடன் கலந்துரையாடல் (muzakarah) நடத்தும் விஷயமே எழவில்லை என்பதால் அது நடைபெறப் போவதில்லை என பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று தெளிவுபடுத்தியுள்ளார். அரசு சாரா அமைப்புக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தும் பாஸ் அம்னோவுடன் கலந்துரையாடலை ஏன் நடத்தவில்லை என மே 13ம் தேதி நிருபர் ஒருவர் கேள்வி…
கலந்துரையாடலுக்குமுன் நிபந்தனைகளை நிறைவேற்றுக:பாஸ் வலியுறுத்து
மலாய்க்காரர் ஒற்றுமை மீது கலந்துரையாடல் நடத்துவதற்குமுன் பாஸ் விதிக்கும் நிபந்தனைகளை நிறைவேற்றுவது அம்னோவுக்குக் கடினமாக இராது என்கிறார் துவான் இப்ராகிம் துவான் மான். கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் என்பதில் இரு கட்சிகளுக்கும் கருத்திணக்கம் உண்டு,ஆனால், கலந்துரையாடலுக்குமுன் நிபந்தனைகள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும் என்று பாஸ் தகவல் பிரிவுத் தலைவராக…