முஸ்லிம் அல்லாத ஒரே பேராளர் பாஸ் மிதவாதத்தை ஆதரிக்கிறார்

58வது பாஸ் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள முஸ்லிம் அல்லாத ஒரே பேராளரான கே தீபகரன் பாஸ் கட்சியின் மிதவாதப் போக்கைப் பாராட்டிப் பேசியிருக்கிறார். அந்தக் கட்சி தீவிரவாதக் கட்சி என பிஎன் குற்றம் சாட்டுவதை அவர் நிராகரித்தார். பாஸ் கட்சிக்கு எதிரான எண்ணம் 2008 பொதுத்…

பாஸ்: ‘பிசாசுகள் கட்சி’ பற்றி டாக்டர் மகாதீரே விளக்க முடியும்

பாஸ் கட்சியின் இன்றைய ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் வருணிக்கப்பட்ட 'பிசாசுக் கட்சி' பற்றிய விளக்கத்தை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மட்டுமே தர முடியும் என பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி கூறியுள்ளார். "மகாதீரைப் போய்க் கேளுங்கள். அதனைச் சொன்னது மகாதீர், அந்த சொல்லை உருவாகியவர்…

பக்காத்தானுடன் இணைந்து மலேசியாவை ஆட்சி செய்ய பாஸ் தயார் என…

பக்காத்தான் ராக்யாட் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து கூட்டரசு அதிகாரத்தை ஏற்றுக் கொள்வதற்கு பாஸ் கட்சி தயாராக இருக்கிறது. இவ்வாறு அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் பிரகடனம் செய்துள்ளார். அவர் இன்று அந்தக் கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் (முக்தாமார்) பேசினார். அடுத்த பொதுத் தேர்தலுக்கு முந்திய, கட்சியின்…

பாஸ் இளைஞர் கூட்டத்தில் ஹாராகாவைக் கண்டிக்கும் தீர்மானம்

கோத்தா பாருவில் நடைபெறும் தேசிய பாஸ் இளைஞர் மாநாட்டில் இன்று பின்னேரம் கட்சியின் கொள்கை ஏடான ஹராகாவைக் கண்டிக்கும் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டரசு பிரதேச பாஸ் இளைஞர்கள் கொண்டுவரும் அத்தீர்மானம், ஹராகாவின் செய்தி வெளியிடும் தரம் தாழ்ந்து அது நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாகக் குற்றம் சாட்டுகிறது.…

ஹாடி: ‘Negara Berkebajikan’ கோட்பாட்டை ஊடகங்கள் திசை திருப்புகின்றன

பாஸ் கட்சியின் 'Negara Berkebajikan' கோட்பாட்டு திட்டத்தை குறை கூறுகின்றவர்களை அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சாடியுள்ளார். அந்தக் கோட்பாட்டுக்கு ஊடகங்கள் தவறான விளக்கம் கொடுப்பதாகவும் அவர் சொன்னார். அந்தக் கோட்பாடு ஊடகங்கள் சொல்வதைப் போன்று சமூக நல நாடு அல்ல மாறாக அது அரசியல் இஸ்லாம்…

நுருலை பொது மக்கள் மதிப்பீடு செய்யட்டும் என்கிறார் பாஸ் உலாமா…

'சமயத்தில் கட்டாயம் இல்லை' என பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் கூறியுள்ள கருத்துக்கள் மீது அவரைப் பொது மக்கள் மதிப்பீடு செய்ய விட்டு விடுவதாக பாஸ் கட்சியின் உலாமாப் பிரிவுத் தலைவர் ஹருண் தாயிப் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய அந்தக் கருத்துக்காக நுருலை ஏற்கனவே கண்டித்துள்ள அவர்,…

நுருல் உரையில் எந்தத் தப்பையும் பாஸ் காணவில்லை

"சமயத்தில் கட்டாயம் இல்லை" என லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் விடுத்த அறிக்கையில் தப்பு ஏதனையும் பாஸ் கட்சி காணவில்லை. "இஸ்லாத்தின் காவலன்" என தன்னை அம்னோ கருதிக் கொள்வதாகவும் அது சாடியது. "அந்த விவகாரம் குறித்து சர்ச்சை எழுந்த பின்னர் ஒருவர் இஸ்லாத்தைத் தழுவியதும்…

மாஹ்புஸ்: நாங்கள் அயதுல்லாக்கள் அல்ல; குறை கூறல்களை ஏற்கத் நாங்கள்…

முன்னாள் பெர்லிஸ் முப்தி முகமட் அஸ்ரி ஜைனுல் அபிடின் அஞ்சுவது போல பாஸ் கட்சி குறை கூறல்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் சமயத் தலைவர்களை வைக்காது. அதனால் அது அயதுல்லாக்களைப் போல மாறாது என கட்சித் துணைத் தலைவர் மாஹ்புஸ் ஒமார் கூறியுள்ளார். பாஸ் கட்சி மற்றவர்களுடைய கருத்துக்களுக்கும் குறை…

அயதுல்லா ஆட்சியை பின்பற்ற வேண்டாம் என பாஸ் கட்சிக்கு எச்சரிக்கை

பாஸ் கட்சி அதிகாரத்துக்கு வந்தால் சமயத் தலைவர்களை குறைகூறல்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் வைத்து அயதுல்லா கோமெய்னியின் கீழ் ஈரான் இருந்ததைப் போன்ற நிலையை பின்பற்றக் கூடாது என முன்னாள் பெர்லிஸ் முப்தி முகமட் அஸ்ரி ஜைனுல் அபிடின் எச்சரித்துள்ளார். இல்லை என்றால் மலேசியாவில் ஊழல் நிலமை மேலும் மோசமடையும்…

மலாய் மேலாண்மையால் மலாய்க்காரர்-அல்லாதாரின் உரிமைகள் படிப்படியாகக் கரைந்துபோகலாம்

மலாய் மேலாண்மை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தால், மலேசியாவின் மற்ற இனங்களின் உரிமைகளுக்கு உத்தரவாதமின்றிப் போகும் என்று பாஸ் தலைவர் ஒருவர் எச்சரித்துள்ளார். “மலாய் மேலாண்மை” என்பது மலாய்க்காரர் உரிமைகளைப் பாதுகாப்பதைவிட அம்னோ நீண்டகாலம் Read More

நிக் அசீஸ் விலக வேண்டும் என்கிறார் ஹசன் அலி

பக்காத்தான் ரக்யாட்டில் பாஸ்-டிஏபி ஒத்துழைப்பைத் தற்காத்துப் பேசும் நிக் அப்துல் அசீஸ் நிக் மாட் பதவி விலக வேண்டும் என்று சிலாங்கூர் முன்னாள் பாஸ் ஆணையர் ஹசன் அலி கூறியுள்ளார். “நிக் அசீஸ் தாமதிக்காமல் கட்சியின் ஆன்மிகத் தலைவர் பதவியைத் துணைத் தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்பதவியை ஏற்கும்…

நிக் அசீஸ்: டிஏபி பாஸூக்கு தொந்திரவு கொடுத்ததில்லை

டிஏபி என்றும் பாஸுக்கு தொந்திரவு கொடுத்ததில்லை என்கிறபோது பாஸ் டிஏபியுடன் ஒத்துழைப்பதை எதற்காகக் கண்டனம் செய்கிறார்கள் என்பது தமக்குப் புரியவில்லை என்கிறார் கிளந்தான் மந்திரி புசார் நிக் அசீஸ் நிக் மாட். நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ், உத்துசான் மலேசியா, பெரித்தா ஹரியான், சினார் ஹராபான் உள்பட பல நாளேடுகள்…

விபத்து அதிகம் நடக்கும் இடங்களில் ஏஇஎஸ் இல்லையே, ஏன்?

விபத்துகளைத் தடுக்கும் நோக்கில்தான் போக்குவரத்துக் குற்றங்களைக் கண்காணிக்கும் தானியக்க அமலாக்க முறை (ஏஇஎஸ்) கொண்டுவரப்பட்டது. ஆனால், அது விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்களில் இல்லாதது ஏன் என்று பாஸ் தொடர்புள்ள என்ஜிஓ-வான Kempen Anti Saman Ekor (கேஸ்) கேள்வி எழுப்பியுள்ளது. “அது அமைந்துள்ள இடங்களைப் பார்த்தால் எங்களுக்கு…

பாஸ் தலைவர்கள்: நஷாவின் கூற்றுக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை

பாஸின் உதவித் தலைவர் சலாஹுடின் ஆயுப்பும், மத்திய செயற்குழு உறுப்பினர் காலிட் சமட்டும், கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் நஷாருடின் மாட் ஈசாவின் கூற்றுக்கும் பாஸுக்கும்  எவ்வித சம்பந்தமுமில்லை என்றார்கள். இன்று செய்தியாளர் கூட்டமொன்றில், டிஏபி கிறிஸ்துவ அரசாங்கத்தை நிறுவ முயல்வதாக நஷாருடின் பேசியிருப்பது பற்றிக் கருத்துரைத்த காலிட்,…

தனிப்பட்ட அறிவிப்புகளைச் செய்ய வேண்டாம்: அஸ்மின் அலிக்கு பாஸ் எச்சரிக்கை

சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் பொதுத்தேர்தலுக்குப் பின்னர் மாற்றப்படலாம் என்று பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறியது குறித்து வருத்தம் தெரிவித்த பாஸ், பக்காத்தான் ரக்யாட் ஒன்றும் அப்படி முடிவு செய்யவில்லை என்றது. அது அஸ்மினின் சொந்த கருத்தாக இருக்கலாம் என்று தம் கட்சி கருதுவதாகக்…

‘பழைய சட்டம்’ ‘பணக்காரத் தலைவர்’ மீது எம்ஏசிசி நடவடிக்கை எடுப்பதைத்…

மாநிலம் ஒன்றின் பணக்காரத் தலைவர்' சம்பந்தப்பட்ட ஊழல்கள் எனக் கூறப்படும் விஷயங்கள் மீது எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்துவதற்கு சட்ட விதிகள் தடையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என பாஸ் குபாங் கெரியான் எம்பி சலாஹுடின் அயூப் கூறியிருக்கிறார். ஊழல் மீதான நாடாளுமன்றச் சிறப்புக்…

பாஸ்: பட்ஜெட் ஏற்படுத்திய மயக்கத்தைக் கணக்கறிக்கைத் தெளிய வைக்கும்

விரைவில் வெளிவரும் தலைமைக் கண்காய்வாளர் (ஏஜி) அறிக்கை. 2013 பட்ஜெட் என்னும் ‘கஞ்சா’வால் ஏற்பட்டிருக்கும்  போதையைத் தெளிய வைக்கும் என்று பாஸ் கூறுகிறது. கணக்கறிக்கையின்முன் பட்ஜெட் முக்கியத்தும் இழக்கும் என்பதால் மத்திய அரசு வேண்டுமென்றே அதன் வெளியீட்டைத் தாமதப்படுத்தியது என்று பாஸ் விளம்பரப் பிரிவுத் தலைவர் துவான் இப்ராகிம்…

நாங்கள் இஸ்லாமிய ஜனநாயகவாதிகள் என்கிறார் பாஸ் தலைவர் ஒருவர்

பாஸ் அரசியல் கட்சியாக 64 ஆண்டுகள் நிலைத்திருந்த பின்னர் "முதிர்ச்சி" அடைந்துள்ளதாக அந்தக் கட்சியின் ஆய்வுக் கழக நிர்வாக இயக்குநர் சுல்கெப்லி அகமட் கூறுகிறார். அவர் பாஸ் கட்சியில் முன்னேற்ற சிந்தனைகளைக் கொண்ட எர்டோகன் பிரிவைச் சார்ந்தவர் ஆவார். "நாங்கள் இனிமேலும் இஸ்லாமியவாதிகள் அல்ல. ஆனால் இஸ்லாமிய ஜனநாயகவாதிகள்,"…

ஆண்-பெண் என பிரிக்கப்படுவதில்லை என்கிறது பாஸ்

நெகிரி செம்பிலான் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி கூடாரங்கள் அமைக்கப்பட்டது அவர்களை பிரித்து வைக்கும் நோக்கத்தைக் கொண்டது எனக் கூறப்படுவதை பாஸ் இன்று மறுத்துள்ளது. வருகையாளர்களுடைய சௌகரியத்தைக் கருத்தில் கொண்டு அவ்வாறு செய்யப்பட்டதாக பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி சொன்னார். "நாங்கள்…

பாஸ் கட்சி syura மன்றத்தில் நசாருதினை தொடர்ந்து வைத்திருக்கிறது

ஹுடுட் சர்ச்சை மீது பாஸ் கட்சி நிலையை நசாருதின் குறை கூறிய போதிலும் அவரைத் தொடர்ந்து syura மன்றத்தில் தொடர்ந்து வைத்திருப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங், நேற்றிரவு அந்தத் தகவலை வெளியிட்டார். இரவு 9 மணி வாக்கில் தொடங்கிய syura…

புகைப்படத்தைக் காலால் மிதிப்பதைவிட பள்ளி வாசலில் காலணி எறிவது மோசமான…

பிரதமர், அவரின் துணைவியார் ஆகியோரின் படங்களைக் காலில் போட்டு மிதிப்பதைக் காட்டிலும் ஒரு பள்ளிவாசலுக்குள் காலணியை விட்டெறிவது மிகவும் மோசமான செயலாகும் என்று பாஸ் உதவித் தலைவர் மாவுஸ் ஒமார் இன்று கூறினார். ஏனென்றால் பள்ளிவாசல் ஒரு புனிதமான இடம், அது “இறை இல்லமாக”ப் போற்றப்படுவது என்று மாபுஸ்…

நசாருதின் விலக்கப்படுவார் என உத்துசான் ஆரூடம்

வரும் ஞாயிற்றுக் கிழமை பாஸ் கட்சியின் syura மன்றமும் மத்தியக் குழுவும் கூடும் போது அந்தக் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் நசாருதின் மாட் ஈசா நீக்கப்படுவார் என உத்துசான் மலேசியா ஆரூடம் கூறியுள்ளது. பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமை ஆதரிக்கும் பாஸ் தலைவர்கள் ( Anwarinas…

ஹுடுட் மீது இணக்கமில்லை என பாஸ் கட்சியும் டிஏபி-யும் ஒப்புக்…

ஹுடுட் சட்ட அமலாக்கம் மீது மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ள போதிலும் பாஸ் கட்சியும் டிஏபி-யும் அதன் தொடர்பில் தகராறு செய்து கொள்ள மாட்டா. இவ்வாறு பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி கூறுகிறார். அந்த விவகாரம் மீது பாஸ், டிஏபி ஆகியவற்றுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் இருப்பதை அவை…