பாஸ் கட்சி syura மன்றத்தில் நசாருதினை தொடர்ந்து வைத்திருக்கிறது

ஹுடுட் சர்ச்சை மீது பாஸ் கட்சி நிலையை நசாருதின் குறை கூறிய போதிலும் அவரைத் தொடர்ந்து syura மன்றத்தில் தொடர்ந்து வைத்திருப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தக் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங், நேற்றிரவு அந்தத் தகவலை வெளியிட்டார்.

இரவு 9 மணி வாக்கில் தொடங்கிய syura மன்றக் கூட்டம் இரண்டு மணி நேரத்திற்கு நீடித்தது. அப்போது நசாருதின் நிலை குறித்து விவாதிக்கப்படவில்லை.

அடுத்த பொதுத் தேர்தலில் நிறுத்தப்படும் பாஸ் வேட்பாளர்கள் பற்றி முக்கியமாக அங்கு விவாதிக்கப்பட்டதாக ஹாடி சொன்னார்.

“கூட்ட நிகழ்ச்சி நிரலில் அந்த அங்கம் இல்லை. கூட்டத்தில் அவரும் கலந்து கொண்டிருந்தார். அவர் இன்னும்  syura மன்ற உறுப்பினரே.”

ஹுடுட் விவகாரத்தில் பாஸ் கட்சி நிலை குறித்து வெளிப்படையாகக் கேள்வி எழுப்பியதாலும் பக்காத்தான் ராக்யாட்டிலிருந்து பாஸ் வெளியேற வேண்டும் என வற்புறுத்தியதாலும் அந்த பாச்சோக் எம்பி நீக்கப்படலாம் என்ற ஆரூடங்களுக்கு ஹாடி அறிக்கை முற்றுப் புள்ளி வைத்துள்ளது.

அடுத்த தேர்தலில் நசாருதின் பாஸ் வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்ற கேள்விக்குப் பதில் அளித்த ஹாடி அது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

“பொதுத் தேர்தலுக்காக காத்திருங்கள். நானும் வேட்பாளாரா இல்லையா என்பது கூட எனக்குத் தெரியாது,” என அவர் சொன்னார்.

ஹாடி, உதவித் தலைவர் சலாஹுடின் அயூப் ஆகியோருடன் நிருபர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட நசாருதின் எந்தக் கருத்தும் தெரிவிக்க மறுத்து விட்டார்.

syura மன்றத் தலைவரும் கட்சியின் ஆன்மீகத் தலைவரும் கிளந்தான் மந்திரி புசாருமான நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் கட்சித் தலைமையகத்திலிருந்து  இரவு மணி 9.20 வாக்கில் புறப்பட்டார். அவர் ஊடகங்களுக்கு எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

TAGS: