புகைப்படத்தைக் காலால் மிதிப்பதைவிட பள்ளி வாசலில் காலணி எறிவது மோசமான செயல்

பிரதமர், அவரின் துணைவியார் ஆகியோரின் படங்களைக் காலில் போட்டு மிதிப்பதைக் காட்டிலும் ஒரு பள்ளிவாசலுக்குள் காலணியை விட்டெறிவது மிகவும் மோசமான செயலாகும் என்று பாஸ் உதவித் தலைவர் மாவுஸ் ஒமார் இன்று கூறினார்.

ஏனென்றால் பள்ளிவாசல் ஒரு புனிதமான இடம், அது “இறை இல்லமாக”ப் போற்றப்படுவது என்று மாபுஸ் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது குறிப்பிட்டார்.

“பள்ளிவாசலுக்குள் காலணி விட்டெறிவது மிகவும் வருந்ததக்க ஒரு செயல் ஆனால், அதை விட்டுவிட்டு அந்தச் சம்பவத்தை (புகைப்படம் மிதிக்கப்பட்டதை) அரசாங்க ஊடகங்களும் மையநீரோட்ட ஊடகங்களும் பெரிதுபடுத்துவது ஏன்?

“பள்ளிவாசலைவிடவும் புகைப்படம் புனிதமானது என்றவர்கள் கூறுகிறார்களா?”, என்றவர் வினவினார்.

கடந்த வாரம் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்  பேசிக்கொண்டிருந்த பள்ளிவாசல்மீது பெர்காசா உறுப்பினர்கள்   தாக்குதல் நடத்தியபோது நிகழ்ந்த சம்பவம் குறித்து கருத்துரைத்தபோது மாபுஸ் இவ்வாறு கூறினார்.

TAGS: