பாஸ் கட்சியின் ‘Negara Berkebajikan’ கோட்பாட்டு திட்டத்தை குறை கூறுகின்றவர்களை அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சாடியுள்ளார்.
அந்தக் கோட்பாட்டுக்கு ஊடகங்கள் தவறான விளக்கம் கொடுப்பதாகவும் அவர் சொன்னார்.
அந்தக் கோட்பாடு ஊடகங்கள் சொல்வதைப் போன்று சமூக நல நாடு அல்ல மாறாக அது அரசியல் இஸ்லாம் தொடர்புடையதாகும் என அப்துல் ஹாடி குறிப்பிட்டார்.
“நாம் ‘Negara Berkebajikan’ கோட்பாட்டை அறிமுகம் செய்த போது அது தெளிவாக இருந்தது. அது சமூக நல நாடு அல்ல. பல நாளேடுகள் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டன.
“பலர் அரசியல் இஸ்லாம் பற்றிப் பேச விரும்புகின்றனர். ஆனால் அவர்கள் பாஸ் கட்சியில் இல்லை. எங்களுடன் சேருங்கள். அடுத்து எப்போது வேண்டுமானாலும் அது பற்றி விவாதிக்கலாம்,” என நேற்றிரவு பாஸ் Muslimat Muktamar-ரை தொடக்கி வைத்த போது ஹாடி கூறினார்.