மசீச இளைஞர் தலைவருக்கு எதிராக ஒரு கிறிஸ்துவரை நிறுத்த பாஸ்…

வரும் தேர்தலில் ஜோகூர் பக்காத்தான் ராக்யாட்டுக்கு முன்னணி போர்க்களமாக மாறி வரும் வேளையில் பாஸ்  கட்சி தனது முஸ்லிம் அல்லாதார் பிரிவிலிருந்து இருவரை அந்த மாநிலத்தில் இறக்குவதற்கு ஆயத்தமாகி  வருகின்றது. அது பிஎன் கோட்டை எனக் கருதப்படும் ஜோகூரில் ஊடுருவ பக்காத்தான் ராக்யாட் வகுத்துள்ள திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் என…

ஹாடி: ‘தேர்தல் தேதிக்காக பிஎன் போமோவைப் பார்க்கிறதோ, என்னவோ’

தேர்தல் தேதியை முடிவுசெய்ய பிஎன் தலைவர்கள் போமோவைப் பார்க்கிறார்களோ என்னவோ - அதனால்தான் நாடாளுமன்றக் கலைப்பு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது என்று கிண்டலடித்தார் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங். “முஸ்தபா அலி (பாஸ் தலைமைச் செயலாளர்) சாத்தியமான தேர்தல் தேதி குறித்து சற்றுமுன்னர் கூறினார். நான் என்ன நினைக்கிறேன்…

கெடாவில் பாஸின் அளவுமீறிய நம்பிக்கையே அதற்குக் கேடாக அமையலாம்

தேர்தல் பார்வை : கெடாவில் பக்காத்தான் ரக்யாட் 15 நாடாளுமன்றத் தொகுதிகளையும் அள்ளிக்கொண்டு போகும் என நம்பிக்கை கொண்டிருக்கிறார் பாஸ் உதவித் தலைவர் மாவுஸ் ஒமார். ஆனால், அது வெறும் கனவாகக்கூட போகலாம். ஏனென்றால் அங்கு பக்காத்தான் ஆட்டம் கண்டிருக்கிறது. அந்த வட மாநிலத்தில் பக்காத்தான் ஒட்டுமொத்த நாடாளுமன்றத்…

‘உடனடி குடிமக்கள்’வாக்களிக்கக்கூடாது :பாஸ் எச்சரிக்கை

ஆளும் கட்சியால் வாக்களிக்கும் உரிமை கொடுக்கப்பட்டு “உடனடிக் குடிமக்கள்” ஆக்கப்பட்டவர்கள் எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்கக்கூடாது என்று பாஸ் தேர்தல் இயக்குனர் டாக்டர் முகம்மட் ஹட்டா ரம்லி எச்சரித்துள்ளார். அப்படிப்பட்டவர்களை அடையாளம் காண பாஸ், அசல் புக்கான் அம்னோ என்னும் என்ஜிஓ-வுடன் சேர்ந்து  முயன்று வருவதாகக் கூறிய ஹட்டா(வலம்), பிஎன்…

‘பெற்றுக் கொள்ளப்படாத மை கார்டுகளும் மைகிட்களும் சபாவுக்கு அனுப்பப்படுகின்றதா ?’

பெற்றுக் கொள்ளப்படாத மை கார்டுகளும் மைகிட்களும் சபாவுக்கு அனுப்பப்பட வேண்டும் எனக் கூறப்படும் உத்தரவை உள்துறை அமைச்சும் தேசியப் பதிவுத் துறையும் விளக்க வேண்டும் என பாஸ் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் கேட்டுக் கொண்டுள்ளார். "அழிக்கப்பட வேண்டிய அந்த அடையாளக் கார்டுகள் அந்நியர்களிடம் வாக்களிப்பதற்காகக் கொடுக்கப்படுவதாக  நான்…

‘ஊழல் நிகழ்ந்துள்ளதாகக் கூறுவது சுல்தானுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாகும்”

2008 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பேராக் மந்திரி புசாராக நியமிக்கப்பட்டதில் ஊழல் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறிக் கொள்கின்றவர்கள் பேராக் சுல்தான் அஸ்லான் ஷா-வின் அறிவாற்றலை அவமானப்படுத்துகின்றனர்  எனப் பேராக் பாஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஏனெனில் அந்தப் பதவிக்கு நிஜாரை நியமித்தது ஆட்சியாளர் என சுல்தானுக்கு சமர்பிக்கப்பட்டுள்ள மகஜர் ஒன்றில் பேராக்…

பாஸ்: ‘அல்லாஹ்’ என்ற சொல்லை முஸ்லிம் அல்லாதார் பயன்படுத்தக் கூடாது

பாஸ் கட்சி, முஸ்லிம் அல்லாதவர்கள் 'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்துவது மீதான தனது நிலையை மாற்றிக் கொண்டு விட்டதாகத் தோன்றுகிறது. இஸ்லாம் அல்லாத சமயப் புத்தகங்களில் 'இறைவன்' என்ற சொல்லுக்கு மொழிபெயர்ப்பாக 'அல்லாஹ்' என்ற சொல் பயன்படுத்தப்படக் கூடாது என அதன் Syura மன்றம் முடிவு செய்துள்ளதே அதற்குக்…

‘அல்லாஹ்’ சர்ச்சை மீது எழுந்துள்ள உட்பூசலைத் தீர்க்க பாஸ் முயலுகிறது

"மலாய் பைபிள்களில் 'அல்லாஹ்' என்னும் சொல்லைப் பயன்படுத்துவது மீது பாஸ் தலைவர்களிடையே எழுந்துள்ள முரண்பாடான எண்ணங்களைச் சரி செய்வதற்கு அந்த வார்த்தையை முஸ்லிம் அல்லாதார் பயன்படுத்த அனுமதிக்கலாம் என 2010ம் ஆண்டு கட்சி செய்த முடிவை மறு ஆய்வு செய்ய வேண்டும்." அந்தக் கருத்தை பாஸ் கட்சியின் உலாமா…

ஜனவரி 12 பேரணி மிகவும் அமைதியாக இருக்கும் என பக்காத்தான்…

எதிர்வரும் மக்கள் எழுச்சிப் பேரணி ( Himpunan Kebangkitan Rakyat ) இது வரை நடந்திராத அளவுக்கு மிகவும் அமைதியான பேரணியாக இருக்கும் என பக்காத்தான் ராக்யாட் வாக்குறுதி அளித்துள்ளது. "நாங்கள் அதனை மிகவும் அமைதியான பேரணியாக திகழச் செய்வோம். அது மிகவும் அமைதியாக நிகழும்  போது கோலாலம்பூரில்…

தொலைக்காட்சியில் ஹாடி: அது நேரடி ஒளிபரப்பாக இருக்க வேண்டும் இல்லை…

'அமானாட் ஹாடி' பற்றி விளக்குவதற்கு தேசியத் தொலைக்காட்சியில் உரையாற்ற நேரடி ஒளிபரப்பு நேரத்தைத் தான் கோரியதை பாஸ் கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அந்தக் கோரிக்கை வியூகமல்ல என அது தெரிவித்தது. "நாங்கள் நேரடி ஒளிபரப்பைக் கோரினோம். எங்களுக்கு அது கிடைக்கா விட்டால் நாங்கள் பங்கு கொள்ளாமல் போகலாம்," என…

வாக்காளர்களை இன அடிப்படையில் வகைப்படுத்துவதை இசி நிறுத்த வேண்டும்

வாக்காளர்களை இன அடிப்படையில் பிரித்து வகைப்படுத்த வேண்டாம் என இசி என்ற தேர்தல் ஆணையத்தை பாஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட வேண்டும் என முன்னாள் இசி தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ள யோசனையைத் தொடர்ந்து அது…

பாஸ்: தீபக் கூறியவைமீது நடவடிக்கை எடுப்பீர் இல்லையேல் பேரரசரிடம் மகஜர்…

பாஸ், மங்கோலியப் பெண் அல்டான்துயா கொலை தொடர்பில் பிரதமர் நஜிப்பும் அவரின் குடும்பத்தாரும் பல விசயங்களை மூடி மறைத்தார்கள் என்று கம்பள வியாபாரி தீபக் ஜெய்கிஷன் குற்றம் சாட்டியிருப்பதன் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளது. “தவறினால் நான் பேரரசரிடம் மகஜர் கொடுப்பேன்”, என்று…

பாஸ்: ‘அல்லாஹ்’ என்ற சொல்லுக்குப் பதில் ‘துஹான்’ என்ற சொல்லைப்…

பைபிளின் மூல வாசகத்தில் உள்ள உண்மையான அர்த்தத்தை பிரதிபலிக்கும் வகையில் பைபிளின் மலாய் பதிப்பில்  ‘God’ அல்லது இறைவன் என்பதற்கு 'அல்லாஹ்' என்னும் சொல்லுக்குப் பதில் 'துஹான்' என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம் என பாஸ் கட்சி இன்று கூறியுள்ளது. "பைபிளின் மலாய் பதிப்பு ஆங்கிலப் பதிப்பின் நேரடி மொழி…

பாஸ் புத்ராஜெயாவைக் கைப்பற்ற பிஎன் குளறுபடிகளை நம்பியிருக்கவில்லை

அடுத்த பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதற்குப் போதுமான சொந்த வலிமையை பாஸ் கட்சி பெற்றுள்ளது. அது பிஎன் -னில் காணப்படும் பலவீனங்களையும் உட்பூசல்களையும் நம்பியிருக்கவில்லை என அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறுகிறார். திரங்கானு, டுங்குனுக்கு அருகில் டாத்தாரான் பாக்கா-வில் பேரணி ஒன்றை பாஸ் ஆன்மீகத் தலைவர்…

தேர்தல் ஆணைய அதிகாரிகள் அரசியல் கட்சிகளில் உறுப்பினர்களாக இருக்கலாம்!

அரசியலில் பங்கேற்பதற்கான ஜனநாயக உரிமை தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளுக்கு உண்டு. ஆனால், அவர்கள் தங்களுடைய கடமையில் பாரபட்சமின்றி இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யுசுப் வலியுறுத்தியதாக மலேசியன் இன்சைடர்  நேற்று வெளியிட்ட செய்தி கூறுகிறது. "தேர்தல் ஆணையத்தின் எந்த ஓர் அதிகாரியும்…

பாஸ்: கோத்தா பாருவில் நால்வருக்கு விதிக்கப்பட்ட அபராதம், இஸ்லாமியச் சட்டம்…

கடந்த அக்டோபர் மாதம் கோத்தா பாரு நகராட்சி மன்றம் முஸ்லிம் அல்லாத நால்வருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ஷாரியா சட்டங்கள் தொடர்புடையது அல்ல. அந்தத் தகவலை பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி இன்று வெளியிட்டார். 1990ம் ஆண்டு கிளந்தான் ஆட்சியை பாஸ் எடுத்துக் கொண்டதிலிருந்து இஸ்லாமியச் சட்டங்களுக்கு எந்த…

ஏஇஎஸ் போராட்டத்தில் பாஸ் கட்சி சட்ட பலவீனத்தைக் கண்டு பிடித்துள்ளது

ஏஇஎஸ் என்ற தானியங்கி அமலாக்க முறையின் கீழ் கொடுக்கப்பட்ட குற்றப்பதிவுகள் சட்டப்படி செல்லாதவை. அத்தகைய குற்றப்பதிவுகளை வெளியிடும் அதிகாரமோ அந்த முறையின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாகக் கூறப்படுகின்றவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தவோ சாலைப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு இல்லை. இவ்வாறு அஞ்சல் வழி அனுப்பப்படும் குற்றப்பதிவுகளுக்கு எதிராகப் போராடும் பாஸ்…

அந்த ஊராட்சி மன்றச் சதிகாரர்கள் மீது பாஸ் நடவடிக்கை எடுக்க…

முஸ்லிம் அல்லாதவர்கள் சம்பந்தப்பட்ட அண்மைய விவகாரங்களில் தவறு செய்துள்ள ஊராட்சி மன்ற 'சதிகாரர்கள்' மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு டிஏபி பாஸ் கட்சியைக் கேட்டுக் கொண்டுள்ளது. பக்காத்தான் ராக்யாட்டுக்குள் உறவுகள் சீர்குலைவதைத் தவிர்ப்பதற்கு அது அவசியம் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார். பாஸ்…

பாஸ்: நஜிப் தமது பெயரைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கு கிடைத்த அரிய…

கடந்த வாரம் தமக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு அம்னோ பொதுப் பேரவையில் பதில் அளிக்கத் தமக்குக் கிடைத்த அரிய வாய்ப்பை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தவற விட்டு விட்டதின் மூலம் நாட்டை ஏமாற்றி விட்டதாக பாஸ் கட்சி கூறுகின்றது. "உண்மையில் நஜிப்பின் நிறைவு உரையில் மக்கள் அவருடைய…

கிளந்தான் விதிகளைத் தளர்த்தும் என சீனர் சங்கங்கள் நம்பிக்கை

கிளந்தான் சீனர் சங்கங்களின் பேராளர்கள் நேற்று மாநில அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து இருபாலர் முடி திருத்தும் நிலையங்கள் மீதான சர்ச்சைக்குரிய தனது விதிமுறைகளை கோத்தா பாரு நகராட்சி மன்றம் தளர்த்தும் என அந்தப் பேராளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். அந்தச் சந்திப்பு கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு…

பிரதமர் அல்டன்துயா விவகாரத்தில் உள்ள தொடர்ப்பை விளக்க வேண்டும்: பாஸ்…

அம்னோ பேராளர்கள் 66வது ஆண்டுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் வேளையில் அல்டன்துயா ஆவி மீண்டும் புறப்பட்டு வந்து நஜிப் அப்துல் ரசாக்கைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அல்டன்துயா விவகாரத்தில் தம் குடும்பத்துக்குள்ள தொடர்பைப் பிரதமர் விளக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கம்பள வியாபாரியான தீபக் ஜெய்கிஷன், மாற்று ஊடகங்கள் மூன்றுக்கு வழங்கிய…

பாஸ்: நஜிப் ‘அசைக்க முடியாத’ டாக்டர் மகாதீரைக் கண்டு அஞ்சுகிறார்

அரசியல் எதிரிகளை கொஞ்சம் கூட ஈவிரக்கமில்லாமல் வேட்டையாடும் 'அசைக்க முடியாத' முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டைக் கண்டு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அஞ்சுவதாக பாஸ் கட்சி கூறிக் கொண்டுள்ளது. "மகாதீர் விரும்புவதை நஜிப் பின்பற்றுகிறார். தமக்கு பாதகமான கோப்புக்கள் வெளியே வரும் என அஞ்சி அந்த…

‘அனைவருக்கும் ஹுடுட்’ என்ற டாக்டர் மகாதீர் கோரிக்கையை ஹாடி நிராகரித்தார்

ஹுடுட் சட்டம் முஸ்லிம் அல்லாதார் உட்பட அனைவருக்கும் அமலாக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர்  மகாதீர் முகமட் தெரிவித்துள்ள யோசனையை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் நிராகரித்துள்ளார். முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதாருக்கும் வெவ்வேறான தண்டனைகள் விதிக்கப்படுவது நியாயமற்றது எனக் கருதப்படுவதோடு இஸ்லாத்தின் போதனைகளுக்கு எதிரானதும் என்று…