‘பெற்றுக் கொள்ளப்படாத மை கார்டுகளும் மைகிட்களும் சபாவுக்கு அனுப்பப்படுகின்றதா ?’

mahpuzபெற்றுக் கொள்ளப்படாத மை கார்டுகளும் மைகிட்களும் சபாவுக்கு அனுப்பப்பட வேண்டும் எனக் கூறப்படும் உத்தரவை உள்துறை அமைச்சும் தேசியப் பதிவுத் துறையும் விளக்க வேண்டும் என பாஸ் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

“அழிக்கப்பட வேண்டிய அந்த அடையாளக் கார்டுகள் அந்நியர்களிடம் வாக்களிப்பதற்காகக் கொடுக்கப்படுவதாக  நான் மிகவும் கவலைப்படுகிறேன்,” என பொக்கோக் செனா எம்பி-யுமான அவர் நிருபர்களிடம் சொன்னார்.mahpuz1

18 மாதங்களுக்குள் பெற்றுக் கொள்ளப்படாத எல்லா மை கார்டுகளும் மைகிட்களும் சபா கெனிங்காவுக்கு அனுப்பபட வேண்டும் எனக் கூறும் 2012ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதியிடப்பட்ட அந்த உத்தரவு எல்லா மாநில தேசியப் பதிவுத் துறை இயக்குநர்களுக்கும் மாவட்ட தேசியப் பதிவுத் துறை அதிகாரிகளுக்கும் வெளியிடப்பட்டதாக மாஹ்புஸ் கூறிக் கொண்டார்.

அந்தக் கடிதத்தின் வாசகத்தையும் வாசித்த அவர், அந்த ஆவணங்கள் புதுப்பிக்கப்படுவதற்காக கெனிங்காவுக்கு  அனுப்பப்பட்டு பின்னர் அவை புத்ராஜெயா தேசியப் பதிவுத் துறை தலைமையகத்துக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

“இது நாள் வரையில் எத்தனை மை கார்டுகளும் மைகிட்களும் பெற்றுக் கொள்ளப்படவில்லை என்பதை அறிய நான் விரும்புகிறேன். பெற்றுக் கொள்ளப்பட்ட ஆவணங்கள் பற்றிய விவரங்களையும் தேசியப் பதிவுத் துறை தர வேண்டும்,” என்றார் மாஹ்புஸ்.

 

TAGS: