தொலைக்காட்சியில் ஹாடி: அது நேரடி ஒளிபரப்பாக இருக்க வேண்டும் இல்லை என்றால் வேண்டாம்

hadi‘அமானாட் ஹாடி’ பற்றி விளக்குவதற்கு தேசியத் தொலைக்காட்சியில் உரையாற்ற நேரடி ஒளிபரப்பு நேரத்தைத் தான் கோரியதை பாஸ் கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அந்தக் கோரிக்கை வியூகமல்ல என அது தெரிவித்தது.

“நாங்கள் நேரடி ஒளிபரப்பைக் கோரினோம். எங்களுக்கு அது கிடைக்கா விட்டால் நாங்கள் பங்கு கொள்ளாமல் போகலாம்,” என அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி இன்று நிருபர்களிடம் கூறினார்.

“அது நேரடியாக இல்லா விட்டால் அது கத்தரிக்கப்படலாம். குரல்கள் ஒடுக்கப்படலாம்.   என்ன வேண்டுமானாலும் நடக்கும்.”

1982ம் ஆண்டு ஹாடி ஆற்றிய உரை குறித்த வாக்குவாதங்கள் மீண்டும் எழுந்து கட்சி குறை கூறப்பட்ட பின்னர் அதனை விளக்குவதற்குத் தங்களுக்கு ஒரு வழி தேவைப்படுவதாக அவர் சொன்னார்.

 

TAGS: