பாஸ்: தீபக் கூறியவைமீது நடவடிக்கை எடுப்பீர் இல்லையேல் பேரரசரிடம் மகஜர் கொடுப்போம்

1pasபாஸ், மங்கோலியப் பெண் அல்டான்துயா கொலை தொடர்பில் பிரதமர் நஜிப்பும் அவரின் குடும்பத்தாரும் பல விசயங்களை மூடி மறைத்தார்கள் என்று கம்பள வியாபாரி தீபக் ஜெய்கிஷன் குற்றம் சாட்டியிருப்பதன் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

“தவறினால் நான் பேரரசரிடம் மகஜர் கொடுப்பேன்”, என்று அந்த இஸ்லாமியக் கட்சியின் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார் எச்சரித்தார்.

1pas1இன்று கோலாலும்பூரில், கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய மாபுஸ் ஒமார், அந்தக் கடுமையான குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல்  அமைதியாக இருந்துவரும் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம், போலீஸ், மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) ஆகியவற்றைக் குறைகூறினார்.

“இது பிரதமர், அவரின் குடும்பம், நாடு, பேரரசசர் ஆகியோரின் கெளரவம் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரமாகும்”, என்றாரவர்.

TAGS: