‘ஊழல் நிகழ்ந்துள்ளதாகக் கூறுவது சுல்தானுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாகும்”

pas2008 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பேராக் மந்திரி புசாராக நியமிக்கப்பட்டதில் ஊழல் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறிக் கொள்கின்றவர்கள் பேராக் சுல்தான் அஸ்லான் ஷா-வின் அறிவாற்றலை அவமானப்படுத்துகின்றனர்  எனப் பேராக் பாஸ் குற்றம் சாட்டியுள்ளது.

ஏனெனில் அந்தப் பதவிக்கு நிஜாரை நியமித்தது ஆட்சியாளர் என சுல்தானுக்கு சமர்பிக்கப்பட்டுள்ள மகஜர் ஒன்றில் பேராக் பாஸ் கட்சியின் வியூக, பிரச்னைகள் குழு ஒருங்கிணைப்பாளர் ராஜா அகமட் இஸ்காண்டார் கூறினார்.

“சுல்தானுக்கு விருப்பம் இல்லாமல் அந்த நியமனம் செய்யப்பட்டதாகக் கூறுவது ஏமாற்றமளிக்கிறது. கடந்த மாதம் பேரா மாநிலச் சட்டமன்றத்தில் விடுக்கப்பட்ட அறிக்கைகள் அந்த நியமனத்தில் ஊழல் சம்பந்தப்பட்டுள்ளது என நேரடியாகக் கூறுகின்றன,” என நேற்றுக் கோலாக் கங்சாரில் பேராக் சுல்தானுடைய உதவியாளர் சம்சுல் பஹாரியிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த மகஜர் குறிப்பிடுகின்றது.

கிளந்தான் அரசாங்கம் பேராக் டிஏபி தலைவர் இங்கே கூ காம்-க்கு சொந்தமான நிறுவனம் ஒன்றுக்கு குவா மூசாங்கில் 30 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 10,526 ஹெக்டர் நிலத்தை கொடுத்துள்ளதாக பிஎன் ஆதரவு வலைப்பதிவாளர் ஒருவர் தமது pisau.net வலைப்பதிவில் கூறிக் கொண்ட பின்னர் அந்தக் குற்றச்சாட்டு முதலில் தலைதூக்கியது.pas1

பேராக் மாநிலத்தை பக்காத்தான் கைப்பற்றியதைத் தொடர்ந்து பாசிர் பாஞ்சாங் சட்டமன்ற உறுப்பினருமான நிஜார் மந்திரி புசாராக நியமிக்கப்படுவது தொடர்பில் டிஏபி-க்கும் பாஸ் கட்சிக்கும் இடையில் நிகழ்ந்த பேச்சுக்களின் ஒரு பகுதி அது என்றும் கூறப்பட்டது.

டிசம்பர் 20ம் தேதி மாநிலச் சட்டமன்றம் கூடிய போது பேராக் அம்னோ தலைவர்களும் அதே குற்றச்சாட்டைத் தெரிவித்தனர்

அதனை மறுத்த கிளந்தான் மந்திரி புசார் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட்,அந்த நிலத்தை கிளந்தான் இஸ்லாமிய அற நிறுவனம் மேம்படுத்தத் தவறியதைத் தொடர்ந்து ஈராயிரத்தாவது ஆண்டு  Upayapadu Plantation company என்னும் நிறுவனத்துக்கு குத்தகைக்கு அந்த நிலம் கொடுக்கப்பட்டது எனச் சொன்னார். அப்போது இங்கே அந்த நிறுவனத்துக்குத் தலைவராக இல்லை.

pisau.net வலைப்பதிவு தனது ஜனவரி 13 பதிவில் திருத்தம் செய்துள்ளதாக நேற்று இங்கே கூறியுள்ளார். பேராக் மந்திரி புசார் பதவி பாஸ் கட்சிக்கு செல்வதை உறுதி செய்ய  இங்கே, அவரது உறவினர் இங்கா கோர் மிங், நிக் அப்துல் அஜிஸ் ஆகியோருக்கு இடையில் நிலம் பரிமாறிக் கொள்ளப்படவில்லை என அந்தத் திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அந்த வலைப்பதிவாளர் அந்த பதிவை மூடி விட்டு இன்னொரு வலைப்பதிவுக்குச் சென்று விட்டார்.

2009ம் ஆண்டு பக்காத்தான் ராக்யாட்டைச் சேர்ந்த மூன்று தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள் பிஎன் நட்புறவு சுயேச்சை உறுப்பினர்களாக மாறியதைத் தொடர்ந்து பங்கோர் சட்டமன்ற உறுப்பினரான ஜாம்ரி அப்துல் காதிர் பேராக் மந்திரி புசார் பதவியை ஏற்றுக் கொண்டார்.

 

TAGS: