ஹுடுட் மீது இணக்கமில்லை என பாஸ் கட்சியும் டிஏபி-யும் ஒப்புக் கொள்கின்றன

ஹுடுட் சட்ட அமலாக்கம் மீது மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ள போதிலும் பாஸ் கட்சியும் டிஏபி-யும் அதன் தொடர்பில் தகராறு செய்து கொள்ள மாட்டா.

இவ்வாறு பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி கூறுகிறார்.

அந்த விவகாரம் மீது பாஸ், டிஏபி ஆகியவற்றுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் இருப்பதை அவை அங்கீகரிப்பதாகவும் அவர் சொன்னார்.

“நாங்கள் அது குறித்த ஒருவர் மற்றவருடைய கருத்துக்களை மதிக்கிறோம். அதன் மீது அவை தகராறு செய்து கொள்ளப் போவதும் இல்லை. அந்த விஷயத்தைப் பெரிதுபடுத்தப் போவதும் இல்லை,” என்றார் அவர்.

“அதே நேரத்தில் ஹுடுட் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் அமலாக்கப்படலாம் என்னும் தோற்றத்தை தரும் வகையில் சீன ஊடகங்கள் அந்த விஷயத்தை பெரிதாக்கி வருகின்றன. அது உண்மை அல்ல,” என்றும் முஸ்தாபா கூறினார்.

அதனை ஒப்புக் கொண்ட டிஏபி எம்பி அந்தோனி லோக், ஹுடுட் மீது மாறுபட்ட எண்ணங்களை பாஸ் கட்சியும் டிஏபி-யும் கொண்டிருந்த போதிலும் எங்கள் நிலை சீனர்களை அச்சுறுத்தும் மசீச-வைப் போன்றதல்ல எங்கள் நிலை என்றார்.

“நாம் குற்றச் செயல்களில் சம்பந்தப்படா விட்டால் நாம் ஏன் அதன் அமலாக்கம் பற்றிக் கவலைப்பட வேண்டும். மசீச செய்வது இஸ்லாத்தைச் சிறுமைப்படுத்துவதாகும். ஹுடுட் தொடர்பில் அது இஸ்லாத்துக்கு தீவிரவாதத் தோற்றத்தை தருகின்றது. அதனை நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை,” என்றார் அவர்.

“இஸ்லாம் கூட்டரசின் அதிகாரத்துவ சமயம் என்பதை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் மற்ற இனங்களும் தங்கள் சமயங்களை இங்கு பின்பற்ற முடியும்,” என்றும் லோக் குறிப்பிட்டார்.

முக்கிய ஊடகங்கள் ஹுடுட் சர்ச்சையை எழுப்புவதற்கு முன்னர் ஆகஸ்ட் 10ம் தேதி வாக்கில் சின் சியூ நாளேட்டுக்கு பேட்டி கொடுத்ததை முஸ்தாபா ஒப்புக் கொண்டார்.