பக்காத்தான் ராக்யாட் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து கூட்டரசு அதிகாரத்தை ஏற்றுக் கொள்வதற்கு பாஸ் கட்சி தயாராக இருக்கிறது.
இவ்வாறு அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் பிரகடனம் செய்துள்ளார்.
அவர் இன்று அந்தக் கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் (முக்தாமார்) பேசினார். அடுத்த பொதுத் தேர்தலுக்கு முந்திய, கட்சியின் கடைசிப் பொதுக் கூட்டம் அதுவாகும்.
“அடுத்த பொதுத் தேர்ர்தலில் பக்காத்தான் ராக்யாட்-உடன் இணைந்து கூட்டரசு அரசாங்க அல்லது மாநில அரசாங்கங்களில் ஒர் அங்கமாக பொறுப்பேற்க பாஸ் தயாராக இருக்கிறது” .
“பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற பாஸ் உறுப்பினர்களுடனும் பாஸ், பக்காத்தான் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படக் கூடிய வல்லுநர்களுடனும் சேர்ந்து மக்கள் ஆதரவுடன் மென்மேலும் பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என ஹாடி சொன்னார்.