ஏஜியைத் தூண்டிவிட முயல்கிறாரா கைரி?

ஏப்ரல் 28பேரணியில் இழைக்கப்பட்ட குற்றச்செயல்களுக்குப் பொறுப்பேற்கும் கடப்பாட்டிலிருந்து பெர்சே விடுவிக்கப்படவில்லை என்று அம்னோ இளைஞர் தலைவர் ஜமாலுடின் அபு பக்கார் கருத்துத் தெரிவித்திருப்பது சட்டத்துறைத் தலைவ(ஏஜி)ரின் பணியில் குறுக்கிடுவதற்கு ஒப்பாகும்.

சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரம் ஏஜிக்கு மட்டுமே உண்டு என்று பாஸ் கோலா சிலாங்கூர் எம்பி சுல்கிப்ளி அஹ்மாட்(இடம்) கூறினார்.

கைரியின் கருத்து பெர்சே 3.0பேரணியை நடத்தியவர்கள்மீது நடவடிக்கை எடுக்குமாறு ஏஜியைத் தூண்டிவிடுவதுபோல் தெரிகிறது என்றாரவர்.

பெர்சே சட்டவிரோத அமைப்பு என்று உள்துறை அமைச்சர் அறிவித்திருந்ததைத் தள்ளுபடி செய்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்துரைக்குமாறு கைரியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், தீர்ப்பின் காரணமாக பெர்சே 3.0பேரணியில் கலந்துகொண்டவர்கள் டாட்டாரான் மெர்டேகாவில் போலீஸ் தடுப்புகளை உடைத்தெறிந்தது போன்ற செயல்கள் எல்லாம் சட்டப்பூர்வமாகி விடாது என்றார்.

TAGS: