முன்னாள் துணைப் பிரதமரின் புதல்வர் தாம்ரின் காபார் பாஸ் கட்சியில் சேருகிறார்

முன்னாள் அம்னோ தலைவரும் முன்னாள் துணைப் பிரதமர் காபார் பாபா-வின் புதல்வருமான முகமட் தாம்ரின் காபார் பாஸ் கட்சியில் ஆயுள் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பத்தை அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங்-கிடம் நேற்றிரவு கோம்பாக் தாமான் மெலேவாரில் பாஸ் அலுவலகத்தில் சமர்பித்தார்.

பாஸ் கட்சியில் சேருவது பற்றித் தாம் வெகு காலமாகவே சிந்தித்து வந்ததாகவும் இப்போது அந்தக் கட்சியின் போராட்டத்துக்கு “தமது நேரத்தை” ஒதுக்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் தாம்ரின் கூறினார்.

“அம்னோவிலிருந்து விலகுவதற்கு நான் அண்மையில் முடிவு செய்யவில்லை. அது அவசரப்பட்டு எடுக்கப்பட்ட முடிவும் அல்ல.”

மக்களைப் பாதுகாக்கும் பாதையிலிருந்து 1990ம் ஆண்டுகளிலேயே அம்னோ விலகி விட்டது என்றும் அவர் சொன்னார்.

“இறைவன் கருணையிருந்தால் நான் என் முழு ஆதரவையும் பாஸ் போராட்டத்துக்கு வழங்குவேன். தாம்ரின் 1986ம் ஆண்டு தொடக்கம் 1995ம் ஆண்டு வரையில் மலாக்கா பத்து பெரெண்டாம் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்துள்ளார். அவர் மாரா தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

 

TAGS: