மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க பாஸ் “பாதுகாவலர்களை” அனுப்புகிறது

டத்தாரான் மெர்டேக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு பாஸ் யுனிட் அமல் என்றழைக்கப்படும் அதன் பழுத்த சிவப்பு நிற சீருடை பொதுநல குழுவை களமிறங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இன்றிரவிலிருந்து 30 யுனிட் அமல் ஆர்வலர்கள் டத்தாரான் மெர்டேக்காவில் நிறுத்தி வைக்கப்படுவர் என்று பாஸ் இளைஞர் பிரிவு செயலாளர் கைருல் ஃபைசி அஹமட் கமில் கூறினார்.

இன்று காலை மணி 3.00க்கு மாணவர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

“நடந்தது குறித்து நான் மிகுந்த ஏமாற்றம் அடைகிறேன். இதன் அடிப்படையில், ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது என்று நான் முடிவு செய்துள்ளேன்”, என்று அவர் கூறினார்.

TAGS: