தெண்டோங் சட்டமன்ற உறுப்பினர் முகம்மட் டாவுட் காலமானார்

பாஸ் தெண்டோங் சட்டமன்ற உறுப்பினர் முகம்மட் டாவுட் இன்று காலை மணி 12.55 அளவில் மாரடைப்பால் காலமானார்.

அச்செய்தியை பாஸ் ஆன்மீக தலைவர் நிக் அசிஸ் நிக் மாட் தமது பேஸ்புக்கில் இன்று அதிகாலையில் பதிவு செய்தார்.

அவரது சவ அடக்கம் இன்று பிற்பகல் நடைபெறும் என்று பாசிர் மாஸ் பாஸ் தலைவர் ஹஜி ஹனிபா அஹமட் கூறினார்.

அந்த 62 வயதான யுகேஎம் முன்னாள் இஸ்லாமிய ஆய்வுகள் விரிவுரையாளருக்கு மனைவியும் ஐந்து குழந்தைகளும் இருக்கின்றனர்.

இடைத்தேர்தல் இல்லை

அவர் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறாது. கிளந்தான் சட்டமன்றத்தின் தவணைக்காலம் மூன்றில்-இரண்டைக் கடந்து விட்டது அதற்குக் காரணம். அடுத்தப் பொதுத்தேர்தலில் இத்தொகுதிக்கான தேர்தல் நடைபெறும்.

சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராகிம் அலியின் வசமிருக்கும் பாசிர் மாஸ் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள இரு சட்டமன்ற தொகுதிகளில் தெண்டோங் ஒன்றாகும்.

2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் முகம்மட் அம்னோவின் முகமட் பவுஸ்சி முகமட்டை 1,657 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

TAGS: