முக்கிய 7 செய்திகள்

  1. மaலாக்கா தேர்தலில் BN கூட்டணி அமோக வெற்றி
  • BN–PN கூட்டணி 28 தொகுதிகளில் 24 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
  • மலாக்காவில் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  1. சரவா தேர்தலில் BN போட்டியிடாது
  • சரவாக் மாநிலத் தேர்தலில் BN வேட்பாளர்களை நிறுத்தாது என அஹ்மத் ஜாஹிட் தெரிவித்துள்ளார். டிசம்பர் 12 வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
  1. சிலாங்கூரில் வெள்ள நிலைமை
  • சிலாங்கூரில் 1,493 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • 398 குடும்பங்கள் ஏழு தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
  1. பல மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை
  • ஒன்பது மாநிலங்கள் மற்றும் கோலாலம்பூரில் இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
  • பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  1. வாட்ஸ்அப் மோசடிகளைக் கட்டுப்படுத்த புதிய திட்டம்
  • வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தொலைபேசி எண் சரிபார்ப்பை கட்டாயமாக்குவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.
  • மோசடி அழைப்புகளைக் கட்டுப்படுத்துவதே நோக்கம்.
  1. மலேசியப் பொருளாதாரம் வளர்ச்சி

– தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி 5%க்கும் அதிகமாக இருக்கும் என நிதியமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  1. சட்டவிரோத மோட்டார் பந்தயத்திற்கு எதிராக நடவடிக்கை
  • கோலாலம்பூரில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் ஆபத்தான சாகசங்களைத் தடுக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.