ஹூடுட் சட்டம் இடம் பெறாத பாஸ் கட்சியின் கொள்கை ஆவணம்

பாஸ் கட்சி அதன் மிக அண்மைய பொதுநல அரசு மீதான கொள்கை ஆவணத்தை வெளியிட்டுள்ளது. அதில் ஹூடுட் சட்டம் அமல்படுத்துவது குறித்து எதுவும் கூறப்படவில்லை.

பத்து கூறுகள் அடங்கிய அந்த ஆவணம்  2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் பரப்புரையின் போது அக்கட்சி மக்கள் முன் வைத்த பொதுநல அரசு திட்டத்தின் விரிவாக்கமாகும் என்று கட்சி தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறினார்.

சமீபகாலமாக, ஹூடுட் சட்டம் அமல்படுத்துவது குறித்து அம்னோவும் பாஸ்சும் அவர்களின் வாய்ச்சண்டையை மீண்டும் தொடங்கின. அக்கொள்கை கட்சியின் இறுதிக் குறிக்கோள் என்று பாஸ் கூறியது. அதனைத் தொடர்ந்து அம்னோவின் பிஎன் பங்காளியான மசீச பக்கத்தான் ரக்யாட் மீது தாக்குதல் நடத்தியது.

அப்பத்து கூறுகளின் கருப்பொருள் பக்கத்தான் கூட்டணியின் பொதுக் கொள்கை ஆவணமான புக்கு ஜிங்காவில் இணைக்கப்பட்டுள்ளது என்று ஹாடி கூறினார்.

“அவற்றைத்தான் நாங்கள் பரப்புகிறோம். பல்லின சமுதாய அடிப்படை விவகாரங்களில் பக்கத்தான் கட்சிகளுக்கிடையில் வேறுபாடுகள் இல்லை. அப்படி இருந்தால், அவற்றை வரவேற்போம், மதிப்போம்.

“இது வெறும் ஜனநாய பழக்கம் மட்டுமல்ல, இது இஸ்லாத்தின் பழக்கமுமாகும்”, என்றார் ஹாடி.

முன்னைய பொதுநல அரசு திட்டத்திலிருந்து இப்புதியத் திட்டம் மாறுபட்டது என்று அவர் விளக்கம் அளித்தார்.

TAGS: