வரும் நாடாளுமன்ற கூட்டத் தொகுப்பு ஜூலை 21 (திங்கள்) முதல் ஆகஸ்ட் 28 வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டங்கள் இரவு நேரம்வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் இதன் முக்கியக் கவனம் 13வது மலேசியத் திட்டம் (13MP) தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்வதும் அதைப் பற்றிய விவாதமும் ஆகும்.
எம்.பி.களிடமிருந்து பல்வேறு தீர்மானங்கள் அவரது அலுவலகத்திற்கு வந்துள்ளதால், கூட்டம் நெருக்கடியான மற்றும் தீவிரமானதாக இருக்கும் என அவர் தெரிவிதார்
“எனவே, 13MP தாக்கல் செசெய்யப்படும்போது மக்கள் தங்கள் எம்.பி.களிடம் அவர்கள் நாடாளுமன்றத்தில் எதை முன்வைக்க வேண்டும் என்று தெரிவிக்க வேண்டும்”.
“சமூக ஊடகங்களில் தங்கள் எம்.பி.களை டேக்(Tag) செய்யுங்கள், அதனால் அவர்களின் குரல் கேட்கப்படும். எம்.பி.கள் தங்கள் தொகுதிக்குத் திரும்பும் வரை காத்திருந்து புலம்ப வேண்டாம். நாடாளுமன்றம் அமர்ந்திருக்கும் போதே விஷயத்தை முன்வையுங்கள்,” என்று அவர் இன்று கெடா மாநிலத்தில் தாமான் பேகான் பாருவில் நடைபெற்ற தேசிய தகவல் பரப்பல் மையத்தை (National Information Dissemination Centre) திறந்து வைத்தபின் கூறினார்.
கூட்டம் காலை 10 மணிக்குத் தொடங்கி இரவு 10 அல்லது 11 மணிவரை நீடிக்கும் வகையில் தினசரி அட்டவணை நிரம்பியிருப்பதால், அமர்வு இரவு நேரம்வரை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
13MP தாக்கல் மிகவும் முக்கியமானது, ஏனெனில் மலேசியா இந்த ஆண்டு ஆசியான் தலைமை வகிக்கிறது. உலகளாவிய அசாதாரண சூழலில் நாட்டின் உறுதியையும் மற்றும் முன்னேற்றத்தை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பு என்று குறிப்பிட்டார்.
சபாநாயகர் ஜொஹாரி பொதுமக்கள் Nadi மையங்களை முழுமையாகப் பயன்படுத்தி தங்கள் வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதார வாய்ப்புகளையும் மேம்படுத்த வலியுறுத்தினார்.
“Nadi என்பது வெறும் டிஜிட்டல் அணுகல் அல்லது சமூக நிகழ்ச்சிகளுக்காக மட்டும் அல்ல. இது மமக்களுக்குத் தேவையானமுக்கியமான தகவல்களைப் பெறவும் வணிக வாய்ப்புகளை ஆராயவும் ஓர் இடமாக அமையும்”.
“அது கல்வி மட்டுமல்லாமல் பல துறைகளிலும் கல்வி பெறும் தளமாக அமையும். குறிப்பாக இளைஞர்கள் இந்த மையங்களைப் பயன்படுத்தி கல்வி கற்று தங்கள் சமூகங்களுடன் ஈடுபட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
பிப்ரவரி 9 அன்று செயல்படத் தொடங்கிய தாமான் பேகான் பாரு Nadi மையம், “1 DUN 1 Nadi” திட்டத்தின் கீழ் கெடா மாநிலத்தில் நிறுவப்பட்ட நான்கு புதிய மையங்களில் ஒன்றாகும், இதனால் மாநிலத்தில் மொத்த Nadi மையங்கள் 81 ஆக உயர்ந்துள்ளன.
– பெர்னாமா