இன்னொரு செக்ஸ் வீடியோவில் இந்த முறை பாஸ் தலைவர் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது

sexவேட்பாளர் நியமன நாளுக்கு இன்னும் எட்டு நாட்கள் இருக்கும் வேளையில் மூத்த பாஸ் தலைவர் ஒருவர்  அடையாளம் தெரியாத மாது ஒருவருடன் செக்ஸ் உறவு வைத்திருந்ததாக கூறப்பட்ட வீடியோ ஒன்று பல  அம்னோ வலைப்பதிவுகளில் நேற்று தொடக்கம் வலம் வந்து கொண்டிருக்கிறது.

ஹோட்டல் அறை ஒன்றில் எடுக்கப்பட்டதாக நம்பப்படும் அந்த வீடியோவில் ஒர் ஆடவர் அடையாளம் தெரியாத மாது ஒருவருடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதையும் பின்னர் ஆடைகளை உடுத்திக் கொள்வதையும் அந்த வீடியோ காட்டுகின்றது.

அந்த மாது-வுக்கு பிகேஆர் பணம் கொடுத்ததாக அம்னோ ஆதரவு வலைப்பதிவாளர் பாப்பாகாமோ கூறிக் கொண்டுள்ளார். எதிர்த்தரப்புப் பக்காத்தான் ராக்யாட் கூட்டணிக்குள் உட்பூசல் நிகழ்வதாகவும் அவர் சொன்னார்.

இன்று காலை சோதனை செய்த போது யூ டியூப் இணையத் தளம் அந்த வீடியோவை அகற்றி விட்டது தெரிய வந்தது.

அந்த வீடியோவில் காணப்படும் தோற்றங்கள் Kedahan69ers.com, Medan Info Kita போன்ற பல
வலைப்பதிவுகளில் காணப்பட்டதாக இன்று தி ஸ்டார் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

திரங்கானுவில் அந்த வீடியோ சிடி-யை விநியோகம் செய்வதற்கான முயற்சிகளை போலீஸ் கண்டு பிடித்துள்ளதாக அந்த ஆங்கில மொழி நாளேடும் உத்துசான் மலேசியாவும் செய்தி வெளியிட்டுள்ளன.

TAGS: