சுங்கை லிமாவில் பாஸ் தேர்தல் இயந்திரம் அமைந்தது

pasபாஸ் கட்சி, நேற்றிரவு கெடா, சுங்கை லிமாவ் இடைத் தேர்தலுக்கான தேர்தல் இயந்திரத்தை அமைத்தது.  கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தேர்தல் இயந்திரத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடத்தப்பட்டதானது அந்த இடைத் தேர்தலின் முக்கியத்துவத்தைக் காண்பிக்கிறது.

கட்சி உறுப்பினர்கள்,  மழையினால் சேறும் சகதியுமான மாறிப்போன நிலப்பகுதியில் குடைகளைப் பிடித்தவாறு நிகழ்வினைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  இடையில் மின் தடை ஏற்பட்டபோதுகூட அவர்கள் இடத்தைவிட்டு நகரவில்லை.

அந்நிகழ்வில் பாஸ் துணைத் தலைவர், மாட் சாபு என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் முகம்மட் சாபு தம் வழக்கமான பாணியில், கலகலப்பாகவும் அம்னோவைக் கிண்டல் செய்தும் கேலி செய்தும் பேசினார்.

30-நிமிட நேரம் பேசினாலும்கூட  இடைத் தேர்தல் வேட்பாளர் யார் என்பதை மாட் சாபு கடைசிவரை  வெளியிடவே  இல்லை. சுங்கை லிமாவ் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் நியமன நாள் அக்டோபர் 23,  வாக்களிப்பு நாள் நவம்பர் 4.

TAGS: