பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலியை பிரதிநிதிக்கும் வழக்குரைஞர் அஸ்முனி அவி, அந்த செக்ஸ் வீடியோவில் காணப்படும் மனிதர் தமது கட்சிக்காரர் எனக் கூறப்படுவதை மறுத்துள்ளார்.
முஸ்தாபா தம்மை அவரது பிரதிநிதியாக நியமித்துள்ளதாகவும் அவர் சொன்னார். அவர் அவி அண்ட் கோ என்னும் வழக்குரைஞர் நிறுவனத்துக்குத் தலைமை தாங்குகிறார்.
“அது அம்னோ நடத்தும் அப்பட்டமான அவதூறுப் பிரச்சாரம். நாங்கள் வேறு யாரையும் சந்தேகிக்கவில்லை. அது அம்னோ வேலை தான்.”
“என் கட்சிக்காரர் அதனை மறுக்கிறார். அந்த வீடியோ திடீரென வெளி வந்துள்ளது,” என பேராக்கைச் சேர்ந்த
அந்த வழக்குரைஞர் சொன்னார்.
அந்தத் தோற்றங்களை சேர்த்த தயாரிப்பாளர் அல்லது வலைப்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க தமது
கட்சிக்காரர் தயங்க மாட்டார் என்றும் அஸ்முனி எச்சரித்தார்.
“அதன் தயாரிப்பாளர் யார் என எங்களுக்குத் தெரிந்தால் நாங்கள் நிச்சயம் சட்ட நடவடிக்கை எடுப்போம்,” என்றார் அவர்.
இதனிடையே அந்த விவகாரம் மீது தாம் எந்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்லப் போவதில்லை என முஸ்தாபா இன்று விடுத்த ஒரு பத்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“அதனைக் கையாளும் பொறுப்பை என் வழக்குரைஞர் அவி அண்ட் கோ-விடம் விட்டு விட்டேன்,” என அவர் பாஸ் கட்சி ஏடான ஹாராக்கா-வுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.