பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலியைச் சித்திரிப்பதாக கூறப்படும் செக்ஸ் வீடியோ குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என பாஸ் ஆன்மீகத் துணைத் தலைவர் ஹரோன் டின் விரும்புகிறார்.
அந்த விவகாரத்தை கையாளுவதற்குக் கட்சியில் உள் நடைமுறை இருக்கிறது என்றும் வான் முத்தாலிப்
எம்போங் தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கைக் குழு அதனை கவனிப்பது நல்லது என்றும் ஹரோன் சொன்னதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.
“எங்களிடம் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உள்ளது. நடவடிக்கை எடுப்பது பொருத்தமாக இருக்கும் என அது கருதினால் அதனைத் தொடரலாம்,” என ஹரோன் மேலும் சொன்னார்.
இதனிடையே முஸ்தாபாவுக்கு கால் முட்டி வலி எப்போதும் மோசமாக இருப்பதாகவும் அதனால் அவர் கடந்த பல ஆண்டுகளாக நாற்காலியில் அமர்ந்தவாறு தொழுகைகளை நடத்துவதாகவும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறியதாகவும் அந்த ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோ போலியானது என வருணித்த அப்துல் ஹாடி, அந்த வீடியோவுக்கு பொறுப்பான தரப்புக்கள், தனிநபர்களைச் சிக்க வைப்பதற்கு நடிகர்களைத் தேடும் போது குறைந்த பட்சம் அந்தப் பாத்திரத்துக்கு பொருத்தமானவர்களைக் கண்டு பிடிக்க வேண்டும் எனச் சொன்னார்.
அந்த வீடியோவில் இருப்பது பாஸ் தலைமைச் செயலாளர் எனக் கூறப்படுவதை முஸ்தாபாவின் வழக்குரைஞரான அஸ்முனி அவி கடந்த வெள்ளிக் கிழமை மறுத்துள்ளார்.