ஜோகூர் பாஸ்: ஹுடுட் சட்டத்துக்கு முதலில் பக்காத்தான் இணக்கம் தேவை

PKR-PASஜோகூரை பக்காத்தான் ராக்யாட் கூட்டணி கைப்பற்றுமானால் சர்ச்சைக்குரிய ஹுடுட் சட்டம் உட்பட எந்த ஒரு  கொள்கையையும் அல்லது சட்டத்தையும் அதன் மூன்று தோழமைக் கட்சிகளுடைய இணக்கத்துடன் மட்டுமே அமலாக்க முடியும் என ஜோகூர் மாநில பாஸ் இன்று கூறியுள்ளது.

“ஜோகூரில் உள்ள நாங்கள் ஒருவருக்கு ஒருவர் துரோகம் செய்ய மாட்டோம். எங்களுக்கு அதிகாரம் கிடைத்தால் நாங்கள் ஒவ்வொரு கொள்கையையும் கூட்டாக முடிவு செய்வோம். நாங்கள் எங்கள் நண்பர்களுக்குத் துரோகம் இழைக்க மாட்டோம்,” என அந்த மாநில பாஸ் துணை ஆணையாளர் மஸ்லான் அலிமான் இன்று ஜோகூர் பாருவில் நிருபர்களிடம் கூறினார்.

“ஜோகூர் பல இன சமுதாயமாகும். கிளந்தான் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் அதன் (ஹுடுட்) அமலாக்கம் வேறு வகையாக இருக்கலாம்.”

“ஹுடுட் உட்பட ஒவ்வொரு கொள்கையும் இணக்க அடிப்படையில் மட்டுமே முடிவு செய்யப்படும்,” என மஸ்லான் சொன்னார்.

ஜோகூர் மாநில அரசாங்கத்தை பக்காத்தான் கைப்பற்றுமானால் ஹுடுட் சட்டத்தை அமலாக்க வேண்டும் என பாஸ் அழுத்தம் கொடுக்குமா என நிருபர்கள் பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் அயூப்பிடம் வினவிய போது மஸ்லான் அதற்குப் பதில் அளித்தார்.

 

TAGS: