ஹாடி : அம்னோ மூழ்குகிறது அதனுடன் சேர்ந்து நாங்களும் மூழ்க விரும்பவில்லை

hadiமலாய்க்காரர்கள் ஐக்கியமடைய வேண்டும் என அம்னோவில் உள்ளவர்கள் விடுத்துள்ள வேண்டுகோளை பாஸ்  தலைவர் அப்துல் ஹாடி அவாங் நிராகரித்துள்ளார்.

அந்த மலாய் தேசியவாதக் கட்சி ‘மூழ்கிக் கொண்டிருக்கிறது, அதனை இனிமேல் காப்பாற்ற முடியாது’ என  அவர் வருணித்தார்.

மூழ்கிக் கொண்டிருக்கும் அம்னோவுடன் பாஸ் சேர்ந்தால் அதுவும் மூழ்கி விடும் எனத் தாம் அஞ்சுவதாக மாரா  எம்பி-யுமான ஹாடி சொன்னதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

“அவர்கள் மூழ்கிக் கொண்டிருக்கின்றனர். நான் கரையில் நிற்கிறேன். நாங்கள் அருகில் செல்லக் கூடாது. நாங்கள் அருகில் சென்றால் நாங்களும் மூழ்கி விடுவோம்,” என அவர் சொன்னார்.

hadi1இஸ்லாத்தின் நன்மைக்காகவும் மலாய்க்காரர்களுடைய மேம்பாட்டுக்காகவும் அம்னோவும் பாஸ் கட்சியும்
ஐக்கியமடைய வேண்டும் என முன்னாள் பாஸ் துணைத் தலைவர் நசாருதின் மாட் ஈசா கேட்டுக்  கொண்டுள்ளது குறித்து ஹாடி கருத்துரைத்தார்.

நசாருதினுடைய வேண்டுகோள் பெரிய நகைச்சுவை என வருணித்த பாஸ் இளைஞர் தலைவர் நஸ்ருதின்  ஹசான், அத்தகைய ஐக்கியம் ஏற்பட முடியாது என்றார்.

ஏனெனில் பிஎன் அரசாங்கம் தொடர்ந்து மக்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டுகின்றது. குறிப்பாக  எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கான எண்ணெய் உரிமப் பணம், மேம்பாட்டு மானியங்கள்
ஆகியவற்றில் பிஎன் பாகுபாடு காட்டுவதாக அவர் சொன்னார்.

“ஒற்றுமைக்கான வேண்டுகோள் அவ்வப்போது மீண்டும் மீண்டும் விடுக்கப்படுகின்றன. அதனால் எந்த  நன்மையும் இல்லை. காரணம் முதலில் இந்த நாடு கருத்து வேறுபாடுகளை ஏற்றுக் கொள்கின்ற, மக்களுடைய  உரிமைகளை திருப்பிக் கொடுக்கின்ற, பாகுபாட்டை ரத்துச் செய்யும் முதிர்ச்சி அடைந்த அரசியலை பின்பற்ற  வேண்டும்.”

“அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் மட்டுமே நாம் ஐக்கியத்தைப் பற்றிப் பேச முடியும்,” என
நஸ்ருதின் சொன்னதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

மலாய்க்காரர்களும் முஸ்லிம்களும் ஒன்றுபடுவதற்காக பாஸ் கட்சியும் அம்னோவும் பொதுவான அடித்தளத்தை  காண  அந்த இரு கட்சிகளும் ஐக்கியமடைய வேண்டும் என நசாருதினுடன் தேசிய இளைஞர்  மன்றம் உட்பட பல தரப்புக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

TAGS: