முன்னாள் அம்னோ உதவித் தலைவர் மாட் தாயிப் பாஸ் கட்சியில் சேர்ந்தார்

mat taibமுன்னாள் அம்னோ உதவித் தலைவர் முகமட் முகமட் தாயிப் பாஸ் கட்சியில் சேர்ந்துள்ளார். ஆனால்  வேட்பாளர் நியமன நாளுக்கு இரண்டு நாள் கழித்து அதாவது திங்கட்கிழமை தான் கட்சி அதிகாரப்பூர்வமாக  அவரை அறிமுகம் செய்யும்.

13வது பொதுத் தேர்தலில் வேட்பாளராக தெரிவு செய்யப்படும் பொருட்டு அவர் அந்தக் கட்சியில் சேர்ந்தார்
என்ற குற்றச்சாட்டுக்களை தவிர்க்கும் பொருட்டு அவ்வாறு செய்யப்படுகின்றது.

பாஸ் கட்சியின் ஆன்மீகத் துணைத் தலைவர் ஹரோன் டின் -னிடம் முகமட் தமது விண்ணப்பத்தைச்
சமர்பிப்பார் எனத் தெரிகிறது.

மாட் தாயிப் என்றும் அழைக்கப்படும் அவர் பாஸ் கட்சியில் சேருவதை அதன் மத்தியக் குழு உறுப்பினரான கமாருதின் ஜாபார் இன்று உறுதி செய்தார். ஆனால் எப்போது அறிவிப்பு வெளியாகும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசாருமான மாட் தாயிப் பாஸ் கட்சியில் சேரக் கூடும் என்ற ஊகங்கள் பற்றிக் கருத்துரைக்குமாறு முன்னாள் பாஸ் தலைமைச் செயலாளருமான கமாருதினிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

TAGS: