பிகேஆர் கட்சியும் பாஸ் கட்சியும் லாபுவான் நாடாளுமன்றத் தொகுதியிலும் பினாங்கு சுங்கை ஆச்சே சட்டமன்றத் தொகுதியிலும் மோதுகின்றன.
லாபுவானில் பிகேஆர் இப்ராஹிம் மெனுடினையும் பாஸ் ஹாட்னான் முகமட்டையும் நிறுத்தியுள்ளன.
அவர்களுடன் அம்னோவைச் சேர்ந்த புதுமுகமான ரோஸ்மான் இஸ்லியும் லாபுவானில் களமிறங்கியுள்ளார். 2008ல் அம்னோவின் யூசோப் மஹால் அந்தத் தொகுதியில் பெரிய பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
“சமரசம் ஏதுமில்லை. நாங்கள் ஒருவரை ஒருவர் எதிர்க்கிறோம். நாங்கள் மீட்டுக் கொள்ள முடியாது. நாங்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்து விட்டோம். நாங்கள் மீட்டுக் கொண்டால் எங்கள் வைப்புத் தொகை போய் விடும்,” என இப்ராஹிம் கூறினார்.
நிறுவன பின்னணியைக் கொண்ட இப்ராஹிம் பிகேஆர் கட்சியின் புதுமுகங்களில் ஒருவர் ஆவார். அவர் கிமானிஸ் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பொங்கோவான் மாநிலச் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
பினாங்கில் சுங்கை ஆச்சேயில் பிகேஆர் கட்சியும் பாஸ் கட்சியும் மோதுகின்றன. அங்கு பிகேஆர் பத்ருல் அமான் ஷாஹாரின்-னையும் பாஸ் முகமட் யூஸ்னி மாட் பியாவையும் நிறுத்தியுள்ளன.
தற்போது அந்தத் தொகுதி அம்னோவைச் சேர்ந்த மாஹ்முட் ஸாக்காரியா வசம் உள்ளது. 2008ல் அந்த
இடத்தை வெறும் 250 வாக்குகள் பெரும்பான்மையில் வென்றார்.