பினாங்கு சுங்கை ஆச்சே-யில் போட்டியிடுவதில் பாஸ் உறுதியாக இருக்கிறது

pasமே 5ம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தேர்தலில் சுங்கை ஆச்சே சட்டமன்றத் தொகுதியில் நிற்கும் தனது  முடிவில் பாஸ் கட்சி உறுதியாக இருக்கிறது.

அதன் தொடர்பில் தான் தோழமைக் கட்சியான பிகேஆர்-உடன் பேச வேண்டியிருந்தாலும் தேர்தலில்
அம்னோவுக்கு எதிராக அது கடுமையாக போராட வேண்டியிருந்தாலும் பாஸ் தனது முடிவிலிருந்து பின்
வாங்காது என மாநில பாஸ் ஆணையாளர் சாலே மான் கூறினார்.

“பாஸ் சுங்கை ஆச்சே தொகுதியில் போட்டியிடும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்,” என்று நேற்றிரவு
தாசேக் குளுகோரில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

“நாம் ஏப்ரல் 20ம் தேதி வேட்பாளர் நியமன நாளுக்குக் காத்திருப்போம். நாங்கள் அந்த விஷயத்தை இனிமேல்
மாநில பிகேஆர் -உடன் விவாதிக்க மாட்டோம். பினாங்கில் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் இரண்டு
நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பாஸ் போட்டியிடும் என்றும் பெர்மாத்தாங் பாசிர் சட்டமன்ற உறுப்பினருமான  அவர் சொன்னார்.pas1

“கடந்த திங்கட்கிழமையன்று கோலாலம்பூரில் நடைபெற்ற பக்காத்தான் ராக்யாட் மத்தியத் தலைமைத்துவக்  கூட்டத்தில் அந்த முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவு இறுதியானது.”

சுங்கை ஆச்சே தொகுதியில் பிகேஆர், அம்னோ ஆகியவைபாஸ் சம்பந்தப்பட்ட மும்முனைப் போட்டி  நிகழுமானால் பாஸ் வெற்றி பெற முடியுமா என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு சாலே பதில் அளித்தார்.

அவ்வாறு மும்முனை போட்டி நிகழ்ந்தால் பக்காத்தான் ஆதரவு வாக்குகள் பாஸ் கட்சியின் யூஸ்னி மாட்
பியாவுக்கும் பிகேஆர் -ன் பத்ருல் ஹிஷாம் ஷாஹாரினுக்கும் இடையில் பிளவுபடும் எனக் கூறப்படுகின்றது.

 

TAGS: