ஹலோ.. ஹாடி, பிஎஸ்எம் மார்க்சிஸ்ட் கட்சியா?

PSM-Marist-Hadiஒரு  யுடியூப் வீடியோவில் பாஸ் கட்சி தலைவர் ஹாடி அவாங் ஓர் இஸ்லாமிய கட்சி ஒரு “மார்க்சிஸ்ட்” கட்சியுடன் ஒத்துழைக்க முடியாது என்று குற்றம் சாட்டியுள்ளது குறித்து பிஎஸ்எம் (மலேசிய சோசலிசக் கட்சி) அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கடும் தோரணையில் கேட்டுக் கொண்டது.

ஹாடிநேரடியாக பெயர் குறிப்பிட்டு  கூறாவிட்டாலும், அவரது அறிக்கை பி எஸ்எம்மை மறைமுகமாகக் குறிப்பிடுகிறது என்று பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ் அருட்செல்வன் கூறினார்.

“ஹாடி எங்களைக் குறிப்பிடுகிறாரா? என்று அவரை கேட்க விரும்புகிறோம்”, என்று கோத்தா டாமன்சாராவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அருட்செல்வன் கூறினார்.

PSM-Marist-Hadi1ஹாடியின் அறிக்கை குறித்து பிஎஸ்எம் தலைவர் நாசிர் ஹசிம் ஏமாற்றம் அடைவதாகக் கூறினார்.

“அடிப்படையற்ற இக்குற்றச்சாட்டு குறித்து நாங்கள் வருத்தமடைகிறோம். அவதூறு கொல்லுதலைவிட கொடுமையானது என்று குரான் கூறுகிறது.”

பிகேஆர் மற்றுக் பாஸ் ஆகிய கட்சிகளுக்கிடையில் தொகுதி பங்கீடுகள் குறித்துப் பேசிய ஹாடி, சில வேட்பாளர்கள் போதைப் பொருள் விநியோகிப்பாளர்களாக செயல்படுகின்றனர் என்று சந்தேகிக்கப்படுவதாக கூறினார்.  ஆனால் எவரின் பெயரையும் வெளியிடவில்லை. “அவர்கள் எப்படி வேட்பாளர்களாக முடியும்?”, என்று அவர் வினவினார்.

“சில வேட்பாளர்கள் (விளாடிமிர்) லெனின், ஸ்டாலின் மற்றும் (கார்ல்) மார்க்ஸ் ஆகியோரின் படங்களை வைத்துள்ளனர். பாஸ் எப்படி அவர்களை ஆதரிக்க முடியும்?”, என்று அவர் மேலும் வினவினார். பாஸ் கட்சி பிகேஆர் மற்றும் டிஎபியுடன் ஒத்துழைக்கிறது, லெனின், ஸ்டாலின் மற்றும் இதர மார்க்ஸிச கட்சியுடன் அல்ல”, என்றாரவர்.

PSM-MAO-Razak“எப்படி நமது கட்சி உறுப்பினர்கள் மார்க்ஸ்சின் படத்தின் கீழிலிருந்து வேலை செய்ய முடியும்? மார்க்ஸ் ரஷ்யர்களின் அருட்போதகர் மற்றும் பொதுவுடமைத் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர். இது மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.”

ஹாடி அவரது அறிக்கையை மீட்டுகொள்ள வேண்டுமா என்று வினவப்பட்டபோது, ஹாடி ஒரு கனவானாக நடந்துகொள்ள வேண்டும். அவர் அந்த அறிக்கையை மீட்டுக்கொள்ள வேண்டும்”, என்று நசீர் பதில் அளித்தார்.

He also said some candidates were suspected to be drug dealers although he did not reveal any names. “How can they be candidates?” he asked.

“Some candidates have portraits of (Vladimir) Lenin, (Joseph) Stalin and (Karl) Marx, how can PAS support them? PAS is cooperating with PKR and DAP, not with the party of Lenin, Stalin and other Marxists,” he continued.

“How can our party members work under the portrait of Marx? Marx is the prophet of Russians and believed in communism. This is forbidden in Malaysia.”

Asked if Hadi should retract the statement and apologise, Nasir said Hadi should be a gentleman and retract the statement.

TAGS: