இன்று காலை நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடைபெற்ற விளக்கமளிப்புக் கூட்டத்தைப் புறக்கணிப்பதுபோல் பக்காத்தான் ரக்யாட்டின் 89 எம்பிகளில் 88 பேர் அக்கூட்டத்துக்குச் செல்லவில்லை.
எதிர்த்தரப்பிலிருந்து ஒரே ஒருவர் மட்டும், டிஏபி-இன் பக்ரி எம்பி எர் தெக் வா மட்டுமே, அதில் கலந்து கொண்டார்.
விளக்கக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா, “அவர்களுக்கு ஏதாவது காரணம் இருந்திருக்கும். அதனால்தான் வரவில்லை. இது புறக்கணிப்பு ஆகாது”, என்றார்.
கூட்டத்தில் கலந்துகொள்வது கட்டாயமல்ல என்றும் அவர் விளக்கினார்.
“கூட்டம் புதிய எம்பிகளுக்காகத்தான். மூத்தவர்கள் பணி செய்யும் இடத்தை மதிப்பவர்களாக இருந்தால் வந்திருக்க வேண்டும். அவர்கள் வராமல் போனதற்கு காரணம் இருக்கும்”.
கூட்டத்துக்கு வந்திருந்தால் சீருடைகளுக்கு அளிப்பாணை அளித்திருக்கலாம், அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பத்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
திருட்டு தனமாக வென்ற முள்ளமாரிகள் எப்படி நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடைபெற்ற விளக்கமளிப்பு கூட்டத்தை நடத்த முடியும் ?
89 பாக்காதான் எம்பிகளும் நாடாளும் மன்றத்தை புறகணிக்கும் விவேகம் கொண்டவர்கள் அல்ல…அப்படி நடக்குமேயானால் நாட்டில் புதிய அரசியல் அலை உருவாகும்.