மூன்று மாற்றரசுக் கட்சித் தலைவர்கள் லஹாட் டத்து ஊடுருவலுக்குப் பின்னணியாக இருந்து செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்களின் பெயர்களை இப்போதைக்கு வெளியிடுவதற்கில்லை என்கிறார் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட். வழக்கு, நீதிமன்றம் கொண்டுசெல்லப்படும்போதுதான் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படுமாம்.
அம்மூவர் தொடர்பான ஆவணங்களும் தகவல்களும் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என்றாரவர். மூவரில் இருவர் தீவகற்பத்தைச் சேர்ந்தவர்கள், ஒருவர் சாபாவைச் சேர்ந்தவர்.
அம்மூவரின் பெயர்களை அறிவிக்க வேண்டும் என்று எஸ்ஏபிபி தலைவர் யோங் தெக் லீ கேட்டுக்கொண்டதற்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
ஊருருவல்காரர்களைத் துடைத்தொழிக்கும் ‘ஒப்ஸ் டவுலாட்’ நடவடிக்கை முழு வீச்சில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அம்மூவரின் பெயர்களைப் பொதுத் தேர்தல் காலத்தில் வெளியிட்டால் அது ஒரு அரசியல் விவகாரமாக்கப்படும் என்பதால் 13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னரே வெளியிடப்படும் என்று அஹ்மன் ஜாஹிட் கூறியிருந்தார்.
-பெர்னாமா
அந்த தீபகற்ப்ப இருவர் யார் என்று நினைக்கிறீர்கள் 1.அன்வார் 2.அஸ்மின் சீரியலை தொடங்கி விட்டார்கள்.
இந்த நீண்ட சீரியலை
நான் பார்க்க தயார் !
எப்போ வெளியீடு காணும் ??
நானும் எங்க அப்பனும்