பக்கத்தான் ராக்யாட் ஏகமனதாக முன்னாள் பெடரல் நீதிமன்ற நீதிபதி அப்துல் காடிர் சுலைமானை நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பதவிக்கு முன்மொழிந்துள்ளது.
ஜூன் 10 ஆம் தேதி அப்துல் கடீரின் நியமனத்தை பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மந்திரி புசாருமான காலிட் இப்ராகிம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது என்று எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
மக்கள் அவையில் தலைவர் பதவிக்கான அனைத்துத் தகுதிகளையும் அப்துல் காடிர் பெற்றுள்ளார். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அவர் பல்வேறு இலாகாகள், அமைச்சுகள் மற்றும் நீதிபரிபாலன ஆணையம் போன்றவற்றில் பதவி வகித்துள்ளார் என்று அன்வார் மேலும் கூறினார்.
இன்றைய த ஸ்டார் செய்தியில் பண்டிகார் அமின் மூலி தேவான் ரக்யாட்டின் தலைவர் பதவியில் மீண்டும் நியமிக்கப்படுவார் என்று கூற்ப்பட்டுள்ளது.
நல்லவர்களையும் நேர்மையானவர்களையும் அம்னோவும் பி என்னும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
சரியான தேர்வு சபா நாயகராக வெற்றிப் பெற வாழ்த்துகள்.