காலித் : நான் பலவீனமான மந்திரி புசார் அல்ல

khalidசிலாங்கூர் அரசாங்கத்திற்கு இரண்டாவது தவணைக் காலத்துக்கு பொறுப்பேற்றுள்ள தாம் பலவீனமான  மந்திரி புசாராக இருக்கப் போவதில்லை சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் கூறியிருக்கிறார்.

தாம் ‘ரிபார்மஸி’ மனிதர் என மலேசியாகினிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் குறிப்பிட்ட அவர், தமது கடமையில் கௌரவமாக நடந்து கொள்ளப் போவதாக தெரிவித்தார்.

“எனக்கு என்ன நடக்கும் ? என்னால் செய்ய முடியாது என்றால் என்னால் முடியாது என நான்  சொல்வேன். உங்களால் செய்ய இயலாது என்றால் அதனை சிலாங்கூர் மக்களிடம் சொல்லும் பணிவு  உங்களுக்கு இருக்க வேண்டும்,” என அவர் சொன்னார்.

மாநில ஆட்சி மன்றத்தில் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியும் அவரது குழுவினரும் இடம்
பெற்றால் அவரது நிலை பாதிக்கப்படுமா என்னும் கேள்விக்குப் பதில் அளித்த போது காலித் அவ்வாறு
கூறினார்.

khalid1அஸ்மின் இடம் பெறுவது காலித் வேலை செய்யும் முறையைப் பாதிக்குமா என வினவப்பட்ட போது “இல்லை,” என அவர் உறுதியாகச் சொன்னார்.

“பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவதற்கு தேவையான பணத்தை பெறுவதற்கு மாநில அரசுக்குச் சொந்தமான  நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என என் கட்சியின் பல உறுப்பினர்கள் விரும்பினர். நாம்  ரிபார்மஸியை (சீர்திருத்தம்) நாடுகிறோம். நாம் மக்கள் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது.  அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது,” என பிகேஆர் கட்சியில் தமது நிலை பற்றிக் குறிப்பிட்ட காலித் கூறினார்.

சேவகர் முறையை பின்பற்றுகின்ற அம்னோ/பிஎன் பாணியில் காரியங்களை செய்ய விரும்புகின்ற தமது சொந்தக் கட்சி உறுப்பினர்களும் இருப்பதை காலித் புக்கிட் டமன்சாராவில் உள்ள தமது குடும்ப
இல்லத்தில் அளித்த பேட்டியில் ஒப்புக் கொண்டார்.

“உங்களுடைய விண்ணப்பம் 20-வதாக இருந்தால் அதனை முதல் எண்ணுக்குத் தாங்கள் கொண்டு வர
இயலும் என எண்ணிய தரகர்கள் முன்பு இருந்தார்கள். ஆனால் முதல் விண்ணப்பம் முதலில் என்ற
கொள்கையை நாம் கொண்டுள்ளோம்.”

“அவர்கள் கூச்சல் போடுவர். காரணம் அவர்களுடைய கோப்பிப் பணத்தை நாம் தடுத்து விட்டோம்.
உங்களுக்கு குத்தகை வேண்டும் என்றால் நீங்கள் உரிமையாளராகவும் அதனை
அமலாக்குகின்றவராகவும் இருக்க வேண்டும்,” என்றார் காலித்.

“நாம் இங்கு பழக்கத்தை மாற்றுவது பற்றி பேசுகிறோம். நீங்கள் சாலைகளுக்குச் சென்று ‘பெர்சே’ எனச்
சொல்லி விட்டு பழைய பணியில் உங்கள் வேலைகளைச் செய்து கொண்டிருப்பது நல்லதல்ல ?”

நெருக்குதலைச் சமாளிக்க முடியும் என காலித் உறுதியாக நம்புகிறார். ஏனெனில் மாநில அரசாங்கம்
பின்பற்றுகின்ற முறை மக்களுக்குத் தெரியும் என்றார் அவர்.

“நாங்கள் ஐந்து ஆண்டுகள் உயிர் பிழைத்து விட்டோம். மக்களுக்கு எங்களைத் தெரியும் என்பதே
அதன் அர்த்தம். நாங்கள் சொல்வதைச் செய்கிறோம் என்பதை அவர்கள் அறிவர். கூச்சல்
போடுகின்றவர்கள் கூட பிரச்சாரம் செய்த போது சிலாங்கூர் நல்ல முறையில் நிர்வாகம்
செய்யப்படுவதைப் பாருங்கள் என மக்களிடம் கூறியிருக்கின்றனர்.”