சிலாங்கூரில் 2013-18 தவணைக்கான மாநில ஆட்சிக்குழு பட்டியலுக்கு சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ்ஷா ஒப்புதல் கொடுத்திருப்பதாக மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் இன்று அறிவித்தார்.
இதனை அடுத்து நாளைக் காலை மணி 9.30க்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கிள்ளான் இஸ்தானா ஆலம் ஷாவில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வர்.
“இன்று சிலாங்கூர் பக்காத்தான் உறுப்புக்கட்சிகளைச் சந்திக்கப் போகிறேன். அப்போது அவர்களிடம் ஆட்சிக்குழுவினர் பட்டியலையும் அதற்கு சுல்தான் ஒப்புதல் கொடுத்ததையும் தெரிவிப்பேன்”. ஷா ஆலம், இஸ்தானா புக்கிட் காயாங்கில் சுல்தான் ஷராபுடினைச் சந்தித்த பின்னர் காலிட் செய்தியாளர்களிடம் பேசினார்.
மாநிலச் சட்டமன்றத்துக்கான அவைத் தலைவரின் நியமனத்துக்கும் சுல்தானின் ஒப்புதல் கிடைத்துள்ளது என்றாரவர்.
மாநில ஆட்சிக்குழுவில் பாஸுக்கு நான்கு இடம், பிகேஆருக்கு மூன்று இடம், டிஏபி-க்கு மூன்று இடம் என 4:3:3 என்ற அமைப்பில்தான் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதா என வினவியதற்கு பக்காத்தான் கட்சிப் பேராளர்களுடன் கலந்துபேசிய பின்னரே அது பற்றி அறிவிக்கப்படும் என்றார்.
அண்மையில் நடந்து முடிந்த 13வது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் சட்டமன்றத்துக்கான 56 இடங்களில் 44-ஐ பக்காத்தான் வென்றது. 2008 தேர்தலில் 36 இடங்கள்தான் கிடைத்தன.
அவற்றில் 14 இடங்களை பிகேஆர் வென்றது. பாஸும் டிஏபியும் தலா 15 இடங்களை வென்றன. பிஎன்னுக்கு 12 இடங்கள் கிடைத்தன.
-பெர்னாமா
நஜிப் மூலம், சிலாங்கூர பக்காத்தானிடமிருந்து கைப்பற்ற முயன்ற பி என் னுக்கு மரண அடி! இனி எப்பொழுதும் படித்தவர்கள் நிறைந்த தொகுதியில் பி என் விரல் சூப்ப வேண்டியதுதான். அப்பாவி பாமரர்கள் தொகுதியில்தான் (தோட்டபுற தமிழர்கள், கம்போங் மலாய்காரர்கள்) அவர்களின் பொய்கள், நம்பிக்கைகள், பணமுடுசுகள்) எடு படும்???
எடுக்க எடுக்க குறையாத அமுத சுரபிபோல், எல்லா வித இயற்கை வளங்களும் நிறைந்த நாடாக மலேசியா உள்ளதால், பி என் அரசியல் வாதிகள் எவ்வளவு பொருளாதார கொள்ளை அடித்தாலும் மலேசியா வீழ்ச்சியுராமல் நிலைத்துள்ளது இன்றுவரை. இன்றைய மலேசியா வளர்ச்சி குறித்து பெருமைப்பட ஒன்றுமில்லை. எந்த மடையன் ஆட்சியில் இருந்திருந்தாலும் இப்போதைய வளர்ச்சியை அடைத்திருக்க முடியும். அதே வேளையில் பெனாங் முதல் அமைச்சர் லிம் குஅன் எங் அல்லது செலங்கோர் முதல் அமைச்சர் காலித் இப்ராகிம் போன்று ஊழல் இன்றி, சிறந்த நிர்வாகத்தை பெற்றிருந்தால் மலேசியா இப்போதைய விட பல மடங்கு வளர்ச்சியை சிங்கப்பூர், ஹாங்காங் அளவிற்கு கண்டிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை??
500 பில்லின் கடனில் மலேசியா? வெட்ககேடு!!!