பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவும், Anything But Umno (அபு) அமைப்பின் தலைவர் ஹரிஸ் இப்ராகிமும் இன்று பிற்பகல் தனித்தனியே கைது செய்யப்பட்டனர்.
கோலாலும்பூரில் தேர்தல் மோசடி-எதிர்ப்புக் கருத்தரங்கில் கலந்துகொண்டதன் தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
சிறிது நேரம் கழித்து முன்னாள் பத்து பெரண்டாம் எம்பியும் பாஸ் உறுப்பினருமான தம்ரின் கப்பாரும் பங்சாரில் கைது செய்யப்பட்டார். முன்சொன்ன கருத்தரங்கில் பேசியவர்களில் அவரும் ஒருவர். கைதான மூவரும் ஜிஞ்ஜாங் போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.
தியான் சுவா, கோலாலும்பூர் குறைந்தகட்டண விமான முனையத்தில் பயணப் பைகளைச் சோதனைக்குக் கொண்டுசென்றபோது கைது செய்யப்பட்டதாக டிவிட்டரில் தகவல் தெரிவித்திருந்தார்.
அவர் திரெங்கானுவில் ‘505 பேரணி’யில் கலந்துகொள்வதற்காக விமான நிலையம் சென்றிருந்தார்.
1948 தேச நிந்தனைச் சட்டம் பகுதி 4(1)-இன்கீழ் தாம் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தம்மிடம் தெரிவிக்கப்பட்டது என்றாரவர்.
இதனிடையே, ஹரிஸ் (படத்தில் நடுவில் இருப்பவர்) செகாம்புட்டில் நண்பர்களுடன் பகல் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார் என பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ். அருட்செல்வன்(படத்தில் வலம் இருப்பவர்) கூறினார்.
மே 13-இல் சுவாரா அனாக் மூடா மலேசியா (எஸ்ஏஎம்எம்) கோலாலும்பூர், சிலாங்கூர் சீன அசெம்ப்ளி மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த தேர்தலுக்குப் பிந்திய கருத்தரங்கில் பேசியவர்களில் ஹரிஸும் ஒருவராவார்.
அக்கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றியதற்காக 23-வயது ஆடாம் அலி (இடம்) கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டு இன்று காலை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
வழக்குரைஞரான ஹரிஸ், இன்று காலை ஆடாமுக்கு ஆதரவு தெரிவிக்க இன்று காலை நீதிமன்றம் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் துணைப் பிரதமர், காலஞ்சென்ற கப்பார் பாபாவின் புதல்வரான தம்ரின் கப்பார் கைதானதை வழக்குரைஞர் மாலிக் இம்டியாஸ் சர்வார் உறுதிப்படுத்தினார். ஆனால், அவர் கைதான காரணம் அவருக்குத் தெரியவில்லை.
இதனிடையே, Solidariti Anak Muda Malaysia (SAMM)தலைவர் பத்ருல் ஹிஷாம் ஷஹாரின், ச்சேகுபார்ட் என்ற பெயரில் பிரபலமான விளங்குபவர், போலீஸ் குழு ஒன்று தம்மைத் தேடி சிரம்பானில் உள்ள தம் தாயார் வீடு சென்று விசாரித்தது என்று டிவிட்டரில் கூறியிருந்தார்.
பிரபல வலைப்பதிவரும் பிகேஆரின் இளநிலை தலைவர்களில் ஒருவருமான அவரும் முன்சொன்ன கருத்தரங்கப் பேச்சாளர்களில் ஒருவராவார்.
இது ஜனநாயக நாடு,விரும்பிய தலைவரை தேர்வு செய்தால்,வரும் கள்ள ஓட்டு.இது அமைதியான நாடு,போலிசின் அராஜகத்தில்,வன்முறையில்,சாவார்கள் தனேந்திரன்கல்.இது நல்ல நாடு உண்மைக்கு குரல் எழுப்பினால் பறிக்கப்படும் நாளேடுகள்.மருத்துவபரிசோதனை மாற்றி அமைக்கும் மருத்துவர்கள்.நீதியை மறுதலிக்கும் நீதிபதிகள்,ஜால்ரா போடும் அரசியல்வாதிகள், உண்மை எங்கே? நீதி எங்கே? பாரிசானுக்கு வாக்களித்த இந்திய மக்களே ,ஏமாந்து போனிரோ ஐநுறு வெள்ளிக்கு.தினம் தினம் மன்னிப்பு கேளுங்கள் ,செய்த பாவத்திற்கு .
அப்படினா .. கைது செயப்பட்ட முன்று பேரும் ரொம்பக் நல்லவங்க ….. அவங்கதான் அடுத்த புத்தரும் காந்தியும் ….அரசாங்கம் நவடிக்கை எடுத்த.. அது ஏன் எதற்கு
என யோசிக்கணும் … அரசாங்கத்தை குறை சொல்லனும்னு கண்டதையெல்லாம் கிறுக்குத்தனமா எழுதறத விடுங்கப்பா ….