பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
மூன்று பக்காத்தான் தலைவர்கள் கைது!
பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவும், Anything But Umno (அபு) அமைப்பின் தலைவர் ஹரிஸ் இப்ராகிமும் இன்று பிற்பகல் தனித்தனியே கைது செய்யப்பட்டனர். கோலாலும்பூரில் தேர்தல் மோசடி-எதிர்ப்புக் கருத்தரங்கில் கலந்துகொண்டதன் தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. சிறிது நேரம் கழித்து முன்னாள் பத்து பெரண்டாம்…
தியான் சுவா, ஹரிஸ் இப்ராகிம் ஆகியோர் காவல்துறையினரால் கைது
பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவும், Anything But Umno (அபு) அமைப்பின் தலைவர் ஹரிஸ் இப்ராகிமும் இன்று பிற்பகல் தனித் தனியே கைது செய்யப்பட்டனர். வார இறுதியில் பெட்டாலிங் ஜெயாவில் திட்டமிடப்பட்டுள்ள தேர்தல் மோசடி-எதிர்ப்புப் பேரணி தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. தியான் சுவா, …
முரட்டுத்தனமாக தாக்கப்பட்டதில் கைதி இறந்தார் என்பதை மருத்துவமனை உறுதிப்படுத்தியது
போலீசாரால் விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட்ட என். தர்மேந்திரன் “முரட்டுத்தனமாகத் தாக்கப்பட்டதில் ஏற்பட்ட காயங்களால்த்தான் இறந்தார்” என்பதை கோலாலும்பூர் மருத்துவமனை (எச்கேஎல்) மருத்துவ நிபுணர் ஒருவர் உறுதிப்படுத்தினார். நேற்றிரவு டாக்டர் சியு சுயு பெங், எச்கேஎல் பிணவறையில் தர்மேந்திரனின் குடும்பத்தாரிடமும் வழக்குரைஞர்கள் என்.சுரேந்திரன், லத்திபா கோயா ஆகியோரிடமும் இதைத் தெரிவித்தார்.…
ஆடாம் அலியை விடுதலை செய்யக்கோரி ஊர்வலம்; 18 பேர் கைது
மாணவர் போராளி ஆடாம் அலியை விடுதலை செய்யக்கோரி ஜிஞ்சங் காவல்நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஊர்வலத்தின்போது 18 பேர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக அரசாங்கத்துக்கு எதிராக மே 13 ஆம் தேதி போராட்டம் நடத்தியதாக கூறி சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவரான ஆடாம் அலியை காவல்துறையினர்…
எம்பிகளுக்குத் தொல்லை கொடுப்பதை நிறுத்துவீர்: போலீசுக்கு சிவராசா கோரிக்கை
போலீசார் “எம்பிகளுக்குத் தொல்லை கொடுப்பதை” நிறுத்த வேண்டும் என்று சுபாங் எம்பி ஆர்.சிவராசா இன்று வலியுறுத்தினார். ஜனவரியில், போலீஸ் காவலில் நிகழ்ந்த மரணம் குறித்து கேள்வி எழுப்பியதற்காக தம்மீதும் பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ மீதும் சுபாங் ஒசிபிடி யாஹ்யா ரம்லி போலீஸ் புகார் செய்திருப்பதை அவர்…
‘மஞ்சள் பொடி தூவி கொலை செய்ததை’ போலீசார் மூடிமறைக்கிறார்கள்
காவலாளியாக பணிபுரிந்த சுகுமார் செல்லத்துரையின் மரணத்துக்கான காரணத்தை போலீசார் மூடிமறைக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அவர் கைவிலங்கிடப்பட்டு, மஞ்சள் பொடி தூவப்பட்டு நான்கு போலீசாரால் அடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. காஜாங் போலீஸ் தலைவர், போலீசார் சுகுமாரை அடிக்கவில்லை என்றும் அவர் மாரடைப்பின் காரணமாக இறந்தார் என்றும் கூறியுள்ளார். “அவரது கூற்று அவ்விவகாரத்தை…
போலீஸ் காவலில் இறந்தவருக்கு நீதி கேட்டு அவரின் குடும்பத்தார் மகஜர்…
போலீஸ் காவலில் இருந்தபோது இறந்துபோன ஒருவரின் குடும்பத்தார் இன்று கோலாலும்பூர் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் சென்று தங்களுக்கு நீதி வேண்டும் என்று கேட்டு அழுது புலம்பினர். கிருஷ்ணன் சுப்ரமணியம், நவம்பர் 8-இல் கோத்தா டமன்சாராவில் கைது செய்யப்பட்டதாக அவர்கள் சொன்னார்கள். நவம்பர் 20-இல் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அவரைக்…
குகன் சடலம் சேதப்படுத்தப்பட்டிருக்கலாம் என துணை ஐஜிபி சாட்சியம்
போலீஸ் தடுப்புக் காவல் கைதி ஏ குகன் சடலம் மீது இரண்டாவது சவப் பரிசோதனை நடத்தப்படுவதற்கு முன்னர் குடும்ப உறுப்பினர்களிடம் அது இருந்த போது சேதப்படுத்தப்பட்டிருக்கக் கூடிய சாத்தியம் இருப்பதாக துணை தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார் தெரிவித்துள்ளார். அதனால்தான் இரண்டாவது சவப் பரிசோதனை…
கிளானா ஜெயாவுக்குக் கூடுதல் போலீஸ் தேவை
கிளானா ஜெயாவில் உள்ள சுமார் 200,000 மக்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்குச் சேவையாற்றவும் 56 போலீசார் இருப்பது போதாது எனக் குறைகூறப்பட்டுள்ளது. மக்கள்தொகைக்கு ஏற்ப போலீசார் எண்ணிக்கை இல்லாததால் தேசா மெந்தாரி, பிஜேஸ் 8,9 போன்ற பகுதிகளிலும் தம் தொகுதியிலும் கடும் குற்றங்கள் “அபாயமளிக்கும் வகையில் பெருகி வருகின்றன” என்று…
தவறு செய்த போலீஸ்காரர்களை அடையாளம் காண முடியவில்லை என்கிறார் முன்னாள்…
பெர்சே 3.0 பேரணியின் போது தமக்குக் காட்டப்பட்ட 10 வீடியோக்களை பல முறை பார்த்த போதும் அவற்றிலிருந்து போலீசார் முரட்டுத்தனத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு போலீஸ் அதிகாரியைக் கூட முன்னாள் டாங் வாங்கி ஒசிபிடி முகமட் சுல்கார்னெயின் அப்துல் ரஹ்மானால் அடையாளம் காட்ட முடியவில்லை. "உதவியாளர்கள் தொடக்கம்…
தேசத் துரோகம் மீதான புலனாய்வில் போலீசார் மலேசியாகினி மடிக்கணினியை பறிமுதல்…
அரசமைப்புச் சட்ட வல்லுநர் அப்துல் அஜிஸ் பேரி மலேசியாகினியில் தெரிவித்த கருத்துக்கள் சிலாங்கூர் சுல்தானுக்கு எதிராக தேசத் துரோகத்தன்மை உடையவை எனக் கூறப்படுவது மீது தாங்கள் மேற்கொள்ளும் புலனாய்வில் ஒரு பகுதியாக போலீசார் மலேசியாகினி செய்தி இணையத் தளத்தின் மடிக்கணினி ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர். அந்த புலனாய்வு தொடங்கப்பட்டு…
மரணம் விளைவித்த குற்றச்சாட்டிலிருந்து கார்ப்பரல் ஜெனாய்ன் விடுதலை
ஷா ஆலம் உயர் நீதிமன்றம், கார்ப்பரல் ஜெனாய்ன் சுபியை ஈராண்டுகளுக்கு முன் 15-வயது அமினுல் ரஷிட் அம்சாவுக்கு மரணம் விளைவித்த குற்றச்சாட்டிலிருந்து இன்று விடுவித்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு விதித்த ஐந்தாண்டுச் சிறைத் தண்டனைக்கு எதிராக ஜெனாய்ன் செய்திருந்த மேல்முறையீட்டை விசாரித்த…
‘போலீஸ் தடுப்புக் காவல் கைதியின் உடம்பில் சிராய்ப்புக்கள்- தாயார் புகார்…
போலீஸ் தடுப்புக் காவல் கைதி தார்மிஸி இட்ரிஸ் செபெராங் ஜெயாவில் திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட போது போலீசாரால் துன்புறுத்தப்பட்டதாக அவரது தாயார் கூறிக் கொண்டுள்ளார். தார்மிஸி தற்போது மருத்துவச் சோதனைக்காக புக்கிட் மெர்டாஜாம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இன்று தாம் தமது புதல்வரைப் பார்த்த போது அவரது உடம்பில் பல…
போலீஸ் தடுப்புக் காவல் கைதியின் பாதுகாப்பு குறித்து அவரது குடும்பத்தினர்…
கடந்த திங்கட்கிழமை பினாங்கு போலீஸ் கைது செய்த தார்மிஸி இட்ரிஸ் குடும்பத்தினர் அவரது பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர். அவர் போலீஸ் காவலில் இருந்த போது துன்புறுத்தப்பட்டதாக அவர்கள் நம்புகின்றனர். செபெராங் ஜெயாவில் அடுக்குமாடி வீடு ஒன்றில் இரவு மணி 7.30 வாக்கில் 20 வயதான தார்மிஸியைப் போலீசார்…
சிறைச்சாலையின் ‘கவனக்குறைவை’ விசாரிக்க வேண்டும் என்கிறார் ஒரு தாய்
கடந்த அக்டோபர் மாதம் காஜாங் சிறையில் நிகழ்ந்த ஆர். குமாரராஜாவின் இறப்புக்குச் சிறை அதிகாரிகளின் கவனக்குறைவுதான் காரணம் என்று கூறி அதை போலீசார் விசாரிக்க வேண்டும் என்று அவரின் தாயார் வலியுறுத்தியுள்ளார். அதன் தொடர்பில், இன்று டாங் வாங்கி போலீஸ் மாவட்டத் தலைமையகத்தில் புகார் ஒன்றைப் பதிவு செய்த…
‘விஷமத்தனமான’ உத்துசான், என்எஸ்டி கட்டுரைகள் மீது ஆஸ்திரேலியர் போலீசில் புகார்…
அரசாங்க ஆதரவு நாளேடுகளான உத்துசான் மலேசியாவும் என்எஸ்டி என்ற நியூ ஸ்ட்யிரட்ஸ் டைம்ஸும் தம்மைப் பற்றி தவறான 'விஷமத்தனமான, வெறுப்பைத் தருகின்ற' கட்டுரைகளை வெளியிட்டதாகக் கூறி ஆஸ்திரேலிய செனட்டர் நிக்கோலஸ் செனபோன் போலீசில் புகார் செய்துள்ளார். அந்தப் புகார் இன்று ஜாலான் டிராவர்ஸ் போலீஸ் நிலையத்தில் சமர்பிக்கப்பட்டது. அந்தப்…
போலீஸ் நுருல் மீதான விசாரணையில் ‘உதவி மட்டுமே’ செய்கின்றது
பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் விடுத்துள்ள 'சமயத்தில் கட்டாயம் இல்லை' என்னும் கருத்து குறித்து ஜயிஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை நடத்தும் விசாரணையில் போலீசார் 'உதவி மட்டுமே' செய்து வருகின்றனர். "அது எங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டதல்ல. ஏனெனில் அது சமயம் சம்பந்தப்பட்ட விஷயமாகும்,"…
அகமட் தினசரி 8 முதல் 9 மணி நேரம் விசாரிக்கப்பட்டார்
முகநூல் பதிவு வழி ஜோகூர் சுல்தானை அவமானப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அகமட் அப்துல் ஜலில் ஜோகூர் பாரு போலீஸ் நிலையத்தில் ஏழு நாட்களுக்கு தனிமையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் இன்று அகமட் தமது தடுப்புக் காவல் அனுபவங்களை விவரித்தார். தாம் வைக்கப்பட்டிருந்த சிறைய அறை மிகவும்…
மலேசியாகினி அலுவலகத்திற்கு 15 போலீஸ்காரர்கள் வருகை
பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா வெளியிட்ட சர்ச்சைக்குரிய அறிக்கை மீtதான ஒரு வாசகரின் கடிதம் குறித்து புலன்விசாரணை நடத்துவதற்காக 15 போலீஸ்காரர்கள் இன்று மாலை (நவம்பர் 8) மலேசியாகினி அலுவலகத்திற்கு வந்தனர். குற்றவியல் சட்டம் 298 இன் கீழ் மலேசியாகினி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு…
15 cops visit Malaysiakini over reader’s letter
A team of 15 police officers visited the Malaysiakini office this evening to investigate a reader's letter related to the recent controversial statement made by PKR vice-president Nurul Izzah Anwar.Malaysiakini is being investigated under…
முன்னாள் போலீஸ்காரர்: குகன் மரணத்துக்கு நான் பலிகடாவாக்கப்பட்டேன்
போலீஸ் கைதியான ஏ குகனுக்கு காயத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் போலீஸ்காரர் ஒருவர், தமக்கு விருப்பமில்லாமல் இருந்தும் தம்மை முன்னாள் சுபாங் ஜெயா ஒசிபிடி பலிகடாவாக்கி விட்டதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார். குகனின் தாயார் தொடுத்துள்ள 100 மில்லியன் ரிங்கிட் போலீஸ் தடுப்புக் காவல் மரண…
போலீஸ், MACC முரட்டுத்தனத்தை ஆட்சேபித்து அரசு சாரா அமைப்புக்கள் பேரணி
டிசம்பர் மாதம் அனுசரிக்கப்படவிருக்கும் மனித உரிமை தினத்துக்கு முதல் நாள் 30 அரசு சாரா அமைப்புக்களை கொண்ட ஒரு குழு அரசாங்க அமைப்புக்கள் பின்பற்றுவதாகக் கூறப்படும் முரட்டுத்தனப் பண்பாட்டை ஆட்சேபித்து பேரணி ஒன்றைத் திட்டமிட்டுள்ளன. அத்தகையை முரட்டுத்தன பண்பாட்டைக் களைவதற்கு அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதாகவும் தெரியவில்லை என்றும் அந்தக்…
ஏய்ட்ஸ் நோயால் இறந்ததாக கூறப்படும் கைதிக்குச் சவப்பரிசோதனை
திங்கள்கிழமை காஜாங் சிறையில் இறந்துபோன ஆர்.குமரராஜாவுக்கு சவப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. அவர் ஏய்ட்ஸ் நோயால் இறந்தார் என்று போலீசார் அறிவித்துள்ளனர். அவரின் உடல்மீது பரிசோதனை இன்று நண்பகல் தொடங்கியது. அது முடிய மூன்று மணி நேரம் ஆகலாம் என்று பிகேஆர் மனித உரிமை ஆர்வலர் எஸ்.ஜெயதாஸ் மலேசியாகினியிடம்…