‘மஞ்சள் பொடி தூவி கொலை செய்ததை’ போலீசார் மூடிமறைக்கிறார்கள்

1suguகாவலாளியாக பணிபுரிந்த சுகுமார் செல்லத்துரையின் மரணத்துக்கான காரணத்தை போலீசார் மூடிமறைக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அவர் கைவிலங்கிடப்பட்டு, மஞ்சள் பொடி தூவப்பட்டு நான்கு போலீசாரால் அடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

காஜாங் போலீஸ் தலைவர், போலீசார் சுகுமாரை அடிக்கவில்லை என்றும் அவர் மாரடைப்பின் காரணமாக இறந்தார் என்றும் கூறியுள்ளார்.

“அவரது கூற்று அவ்விவகாரத்தை மூடிமறைக்கும் ஒரு அப்பட்டமான முயற்சி. அதற்கு செர்டாங் மருத்துவமனையும் துணைபோகிறது”, என்று சுகுமாரின் குடும்பத்தைப் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர்களான என்.சுரேந்திரனும் லத்தீபா கோயாவும் கூறினர்.

1sugu1அச்சம்பவத்தை நேரில் கண்டதாக சாட்சிகள் கூறுகிறார்கள். ஆனால், அவர்களிடமிருந்து போலிசார் வாக்குமூலங்களப் பதிவு செய்யவில்லை என்று அவ்விருவரும் ஓர் அறிக்கையில் கூறினர்.

“மூன்று சாட்சிகள் முன்வந்து சாட்சியம் அளித்துள்ளனர். போலிசார் சுகுமாரைத் துரத்திச் சென்று, கையில் விலங்கிட்டு, அடித்துள்ளார்கள். அவரது முகத்தில் மஞ்சள் பொடியும்  தூவியுள்ளார்கள்.

“அம்மூன்று சாட்சிகளிடமும் வாக்குமூலம் பதிவு செய்யாமல் மரணத்தில் சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை என்று போலீஸ் எப்படிக் கூறலாம்”, என்றவர்கள் கேள்வி எழுப்பினர்.

நேற்று போலீசார், சுகுமாரின் மரணம் இருதயத்தில் அடைப்பு ஏற்பட்டதால் நிகழ்ந்த ‘திடீர் மரணம்’ என்றும் “வேறு காயங்கள் உடலில் இல்லை” என்றும் கூறியிருந்தனர்.

ஆனால், இறந்தவரின் உடலில் “சண்டையிடும்போது ஏற்படுவதுபோன்ற சிறாய்ப்புக் காயங்களை”க் கண்டதாக  வழக்குரைஞர்கள் இருவரும் குறிப்பிட்டனர்.

TAGS: