போலீஸ் தடுப்புக் காவல் கைதியின் பாதுகாப்பு குறித்து அவரது குடும்பத்தினர் அச்சம்

கடந்த திங்கட்கிழமை பினாங்கு போலீஸ் கைது செய்த தார்மிஸி இட்ரிஸ் குடும்பத்தினர் அவரது பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர். அவர் போலீஸ் காவலில் இருந்த போது துன்புறுத்தப்பட்டதாக அவர்கள் நம்புகின்றனர்.

செபெராங் ஜெயாவில் அடுக்குமாடி வீடு ஒன்றில் இரவு மணி 7.30 வாக்கில் 20 வயதான தார்மிஸியைப் போலீசார் கைது செய்தனர். அவரை போலீஸ் போதைப் பொருள் தடுப்புத் துறை புலனாய்வு செய்து வருகின்றது.

தார்மிஸி தாம் கைது செய்யப்படுவதை எதிர்த்ததாக மனித உரிமைகளுக்குப் போராடும் சுவாராம் அமைப்பின் பினாங்குக் கிளை கூறியது.

“அதன் காரணமாக அவருக்கு மின் அதிர்ச்சி கொடுக்கப்பட்டதுடன் போலீசாரால் தாக்கப்பட்டார்,” என அந்த அரசு சாரா அமைப்பு ஒர் அறிக்கையில் கூறிக்  கொண்டது.

“போலீஸ் அவரை ஏழு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைத்துள்ளது. போலீஸ் அதிகாரி ஒருவர் தமது கடமையைச் செய்வதிலிருந்து தடுத்ததாகவும் கைது செய்யப்படுவதை எதிர்த்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்படும்.’

தார்மிஸியின் “பாதுகாப்பு ஆரோக்கியம் ஆகியவற்றை உறுதி செய்து கொள்ள அவரை இன்று பிற்பகல் ஒரு மணி வாக்கில் செபெராங் தெங்கா பிராய் போலீஸ் தலைமையகத்தில் அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

செபெராங் தெங்கா பிராய் போலீஸ் தலைவர் அஸ்மான் அப்துல்லாவுடன் மலேசியாகினி தொடர்பு கொள்ள முடியவில்லை. காரணம் அவரது கைத் தொலைபேசி நேற்று தொடக்கம் ‘பயன்பாட்டில் இருந்தது’.

TAGS: