போலீஸ் காவலில் இறந்தவருக்கு நீதி கேட்டு அவரின் குடும்பத்தார் மகஜர் கொடுத்தனர்

1polisபோலீஸ் காவலில் இருந்தபோது இறந்துபோன ஒருவரின் குடும்பத்தார் இன்று கோலாலும்பூர் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் சென்று தங்களுக்கு நீதி வேண்டும் என்று கேட்டு அழுது புலம்பினர்.

கிருஷ்ணன் சுப்ரமணியம், நவம்பர் 8-இல் கோத்தா டமன்சாராவில் கைது செய்யப்பட்டதாக அவர்கள் சொன்னார்கள். நவம்பர் 20-இல் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அவரைக் கவனிப்பிற்காக பேராக்கில் தஞ்சோங் ரம்புத்தான் மனநோய் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டது.

1polis1மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட கிருஷ்ணன் நவம்பர் 22-இல் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

“சவப் பரிசோதனை அவர் செப்டிசீமியாவால், அதாவது இரத்தம் பாதிக்கப்பட்டு இறந்ததை உறுதிப்படுத்தியது”, என்று சுபாங் எம்பி, சிவராசா ராசையா கூட்டரசு போலீஸ் தலைமையகத்துக்கு வெளியில் கூறினார்.

“அது எப்படி நிகழ்ந்தது? விலங்கு போடப்பட்டதால் அல்லது வேறு காரணங்களால் அவரது மணிக்கட்டில் ஏற்பட்டிருந்த புண்ணுக்கு சிகிச்சை செய்யாமல் விட்டதால்  நிகழ்ந்ததா?

“எளிதாகக் கிடைக்கும் எண்டிபயோடிக் கொடுத்திருந்தால் ஒரு வாரத்துக்குள் குணமாகி இருக்கும்”, என்றாரவர்.

இவ்விவகாரம் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டு போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமாரிடம் மகஜர் ஒன்றைக் கொடுக்க கிருஷ்ணன் குடும்பத்தார் சென்றபோது அவர்களுடன் சிவராசாவும் சென்றிருந்தார்.

கிருஷ்ணன் நீதிமன்றத்தில் நோயுற்றிருந்ததுபோல் காணப்பட்டார்

1polis 3 motherகிருஷ்ணனை அவரின் தாயார் சுப்பம்மா முனியாண்டி நீதிமன்றத்தில் பாதித்தபோதே நோயுற்றிருப்பதுபோல் காணப்பட்டார் என்றும் அவர் சொன்னார்.

புக்கிட் அமான் பணிப்படை ஒன்றை அமைத்து இவ்விவகாரத்தைக் கவனித்து அதற்குப் பொறுப்பானவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும் சிவராசா கேட்டுக்கொண்டார்.

அம்மகஜரை ஐஜிபி-இன் சார்பாக ஏஎஸ்பி ஜஹாங்கிர் பெற்றுக்கொண்டார்.

TAGS: