சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் டிஏஎபி-க்கு மூன்று இடங்கள்தான்

1 excoசிலாங்கூர் ஆட்சிக்குழுவில், டிஏபியும் பிகேஆரும்  தலா மூன்று இடங்களையும் பாஸ் நான்கு இடங்களையும் பெற்றிருக்கும்.

சிலாங்கூர் சுல்தான், ஆட்சிக்குழுவில் 10 பேரில் அறுவர் மலாய்க்காரர்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதால் டிஏபிக்கு ஏற்கனவே உறுதிகூறியதுபோல் நான்கு இடங்கள் கொடுக்க முடியவில்லை என சிலாங்கூர் பக்காத்தான் ரக்யாட் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆட்சிக்குழு உறுப்பினர் பதின்மரும் நாளை கிள்ளான் இஸ்தானா ஆலம் ஷாவில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வர்.

பாஸ் ஆட்சிக்குழுவில்  நான்கு இடங்களைப் பெற்றிருக்கும் என்பதால் அவைத் தலைவர் பதவியும் அவை துணைத் தலைவரும்  முறையே டிஏபி-க்கும் பிகேஆருக்கும் கொடுக்கப்படும்.

1 exco 2டிஏபி சார்பில் தெங் சாங் கிம் (இடம்- சுங்கை பினாங்), இயன் யோங் ஹியான் வா (ஸ்ரீ கெம்பாங்கான்) வி.கணபதிராவ் (கோட்டா ஆலம் ஷா) ஆகிய மூவரும் ஆட்சிக்குழுவில் இடம்பெறுவார்கள் எனத் தெரிகிறது.   அதே வேளை ஹன்னா இயோப் (சுபாங் ஜெயா) அவைத் தலைவர் பொறுப்பை ஏற்பார் என்று கூறப்படுகிறது.

அவருக்கு உதவியாக நிக் நஸ்மி நிக் அஹ்மட் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிகேஆரிலிருந்து எலிசபெத் வொங் (புக்கிட் லஞ்சான்), ரோச்ஸியா இஸ்மாயில் (பத்து தீகா), தரோயோ அல்வி (செமந்தா) ஆகிய மூவர் ஆட்சிக்குழுவில் இடம்பெறுவர்.

ஆட்சிக்குழுவின் மற்ற நால்வரும்  பாஸ்  கட்சியினர்- ஹலிமா அலி (சிலாட் கிளாங்), இஸ்கண்டர் அப்துல் சமட் (செம்பாகா), சாலேஹான் முஹி (சாபாக்), அஹ்மட் யூனுஸ் ஹைரி (சிகிஞ்சான்).

ஆட்சிக்குழு உறுப்பினர் 10 பேரும் இன்று காலை பதவியேற்புச் சடங்கின் ஒத்திகை இன்றில் கலந்துகொண்டனர்.