அப்துல் காலித் இப்ராஹிம் சிலாங்கூர் மந்திரி புசாராக இரண்டாவது தவணைக் காலத்துக்கு இன்று காலை மணி 10.10 வாக்கில் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.
கிள்ளானில் உள்ள இஸ்தானா அலம் ஷா-வில் சிலாங்கூர் சுல்தான் ஷாராபுதின் ஷா முன்னிலையில் அவர் அந்த உறுதி மொழியை எடுத்துக் கொண்டார்.
அந்த நிகழ்வில் அரச குடும்பத்தினரும் மாநில அரசாங்கத் துறைகளின் தலைவர்களும், மாநில அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து கொண்டதாக காலித்-தின் அரசியல் செயலாளர் பாக்கே ஹுசின் கூறினார்.
மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் ஏன் அந்த நிகழ்வில் பங்கு கொள்ளவில்லை என வினவப்பட்ட போது அழைக்கப்படும் பிரமுகர்கள் பட்டியலை அரண்மனை தயாரித்ததாக பாக்கே விளக்கினார்.
பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, காலித் நியமனம் மீது சர்ச்சையை கிளப்பியிருந்தார்.
எங்களின் மனமார்ந்த வாழ்துக்கள். தொடர்ந்து, விவேகடுதுடனும், நீதி நேர்மையோடும், எல்லா இனத்தையும் சமமாக மதித்து, சம வாய்ப்புக்களை அளித்து, பனி செய்வீர்! அடுத்த தேர்தல் வெற்றி நிச்சயமாகும்.
அப்துல் காலித் இப்ராஹிம் சிலாங்கூர் மந்திரி புசாருக்கு நன்றி …..
மீண்டும் சிலாங்கூர் மாநில மந்திரிபுசாராக பதவியேற்றுள்ள அப்துல் காலீட் இப்ராஹிம் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தங்கள் மாநில ஆட்சிக்குழு உருப்பினர்களில் ஒருவராக திரு.சேவியர் ஜெயகுமாருக்கும் வாய்ப்பு வழங்கிடவேண்டும். அவரது சேவை சிலாங்கூர் மாநில மக்களுக்கு தேவை.