ஈப்போவில் இன்றிரவு ‘Bantah 505’ பேரணிக்கு போலீஸ் அனுமதி இல்லை

crowdபேராக் மாநிலத்தில் ‘Bantah 505’ கூட்டத்தை நடத்துவதற்கான விண்ணப்பத்தை போலீசார் அங்கீகரிக்கவில்லை  என அந்த மாநில போலீஸ் தலைவர் முகமட் சுக்ரி டாஹ்லான் கூறியிருக்கிறார்.

காரணம் அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் நிபந்தனைகளை அது பூர்த்தி செய்யவில்லை என்றார் அவர்.

கூட்டம் நிகழ்வதற்கு பத்து நாட்கள் முன்னதாக ஏற்பாட்டாளர்கள் விண்ணப்பத்தைச் சமர்பிக்கவில்லை என  முகமட் சுக்ரி  சொன்னார்.

“ஆகவே ஏற்பாட்டாளர்கள் தொடர்ந்து கூட்டத்தை நடத்தினால் அது சட்ட விரோதமானது,” என அவர் நேற்று தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.

அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் அவர் பொது மக்களுக்கு அறிவுறுத்தினார்.

அந்தக் கூட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் 65 புகார்களைப் போலீசார் பெற்றுள்ளதாகவும் முகமட் சுக்ரி சொன்னார்.

கம்பார் மாவட்ட போலீஸ் நிலையத்தில் 30 புகார்கள், கிரிக்-கில் (19), ஹிலிர் பேராக்கில் (7), மஞ்சோங்கில் 93), பெங்காலான் உலுவில் (3), பத்து காஜா (2), ஈப்போ (1) கொடுக்கப்பட்டுள்ளன.

பக்காத்தான் தலைவர்களுக்கு எதிராக போலீஸ் புகார்கள்crowd1

இதனிடையே பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீது அவதூறு சொன்னதாக கூறிக் கொண்டு பிகேஆர் ஆலோசகர்  அன்வார் இப்ராஹிம், டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங், டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்  ஆகியோர் மீது கூட்டரசுப் பிரதேச அம்னோ தொடர்புக் குழு போலீசில் புகார் செய்துள்ளது.

அந்தக் குழு மேலும் இரண்டு புகார்களையும் கொடுத்துள்ளதாக அதன் நிர்வாகச் செயலாளர் கமாருதின்  ஹசான் கூறினார்.

அந்த இரண்டு புகார்களும் மே 7ம் தேதி கிளானா ஜெயா அரங்கத்தில் நடத்தப்பட்ட சட்ட விரோதப் பேரணி  எனக் கூறப்படுவது, தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் பதவி துறக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார் என கதை ஜோடித்தது ஆகியவை சம்பந்தப்பட்டதாகும்.

அந்த மூன்று புகார்களும் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் சமர்பிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

அந்தப் புகார்கள் கிடைத்துள்ளதை டாங் வாங்கி போலீஸ் தலைவர் ஏசிபி ஜைனுடின் அகமட் உறுதிப்படுத்தினார்.

-பெர்னாமா

TAGS: