பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
‘அஸ்மின் அலி பக்காத்தானை விட்டு வெளியேறத் தயாராகிறாரா?’
அன்வார் இப்ராஹிமின் வலது கரம் எனக் கருதப்படும் முகமட் அஸ்மின் அலி பிகேஆர் கட்சியிலிருந்தும் பக்காத்தான் ராக்யாட் கூட்டணியிலிருந்தும் வெளியேறுவதற்குத் தயாராகி வருவதாகச் சொல்லப்படுகின்றது. "பக்காத்தான் உறுப்புக் கட்சிகளுக்கு இடையில் சிலாங்கூர் ஆட்சி மன்ற இடங்கள் ஒதுக்கீடு குறித்து மனநிறைவு கொள்ளாததால்" அவர் கூட்டணியிலிருந்து விலக விரும்புவதாக கட்சி…
பினாங்கு சட்டமன்றத் தலைவராக சீனர் ஒருவர் நியமனம்
பினாங்கு சட்டமன்றத்துக்கு முதல்முறையாக சீனர் ஒருவர் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். பினாங்கு பிகேஆரின் மாநில துணைத் தலைவர் லாவ் சூ கியாங் சட்டமன்றத் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருப்பதை அக்கட்சியின் மாநிலத் தலைவர் மன்சூர் ஒஸ்மான், உறுதிப்படுத்தினார். டேவான் ஸ்ரீபினாங்கில் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர்…
பக்காத்தான் பேரணி பேச்சாளர்கள் 28பேர்மீது போலீஸ் விசாரணை
நேற்றிரவு பக்காத்தான் ரக்யாட்டின் மாபெரும் பேரணியில் பேசிய 32 பேச்சாளர்களில் 28 பேர் தேசநிந்தனைச் சட்டத்துக்கு முரணாக பேசினார்களா என்று போலீஸ் விசாரணை மேற்கொள்ளும். சம்பந்தப்பட்ட பேச்சாளர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று சிலாங்கூர் போலீஸ் தலைவர் (சிபிஓ) இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்ததாக சீன நாளேடுகள் அறிவித்துள்ளன. பேரணியை…
முகமட் ரஷீட் ஹாஸ்னோன் பினாங்கு மாநில புதிய முதலாவது துணை…
பினாங்கு மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்கள் தேவான் ஸ்ரீ பினாங்கில் இன்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்ட பின்னர் பிகேஆர் பந்தாய் ஜெரஸாக் சட்டமன்ற உறுப்பினர் முகமட் ரஷீட் ஹாஸ்னோன் புதிய முதலாவது துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர், நிபோங் தெபால் எம்பி-யாக தேர்வு பெற்றுள்ள மாநில பிகேஆர்…
மக்கள் கூட்டணி பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேல் திரண்ட மக்கள்
இன்று (08.05.2013) கிளானா ஜெயாவில் பொதுத்தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற மக்கள் பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் திரண்டனர். இரவு மணி 10.39 அளவில் பேரணியில் உரையாற்றிய மக்கள் கூட்டணி தலைவர் அன்வார் இப்ராகிம் மலேசியர்கள், அவர்கள் மலாய்க்காரர்களாகவோ, சீனர்களாகவோ, இந்தியர்களாகவோ, கடஸான்களாகவோ, டயாக்களாகவோ இருக்கலாம், விரும்புவது சுதந்திரமான, நேர்மையான…
சிலாங்கூரில் பக்காத்தான் மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றது
பிகேஆர்-டிஏபி-பாஸ் கூட்டணியான பக்காத்தான் ரக்யாட், சிலாங்கூரில் 56 சட்டமன்ற இடங்களில் 46-ஐக் கைப்பற்றி ஆட்சியை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. இந்த 13வது பொதுத் தேர்தலில் பிஎன்னால் 12 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. அம்மாநிலத்துக்கான முழு முடிவும் வெகு நேரம் கழித்துத்தான் தெரிய வந்தது. ஆகக் கடைசியாக அறிவிக்கப்பட்டது சுங்கை பினாங்…
பேராக் பக்காத்தான்: ‘ஆவி வாக்காளர்களே’ தோல்விக்குக் காரணம்
பேராக்கில் குறுகிய தோல்விகண்டு பக்காத்தான் ரக்யாட், மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து வழக்கு தொடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறது. மாநில பக்காத்தான் தலைவர் முகம்மட் நிஜார் ஜமாலுடின் ‘ஆவி வாக்காளர்களும்' வாக்காளர்கள் தொகுதி மாற்றம் செய்யப்பட்டதும்தான் தங்கள் தோல்விக்கு முக்கிய காரணம் என்றார். பேராக் சட்டமன்றத்தின் 59 இடங்களில்…
பக்காத்தான் ராக்யாட்டுக்கான ஆதரவு 53 விழுக்காட்டுக்கு மேல் உயர்ந்துள்ளது!
தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கும் வேளையில் பக்காத்தானுக்கும் பிஎன்-னுக்கும் தலா 110 நாடாளுமன்ற இடங்கள் கிடைக்கும் என உள்வட்டாரம் ஒன்றை மேற்கோள்காட்டி பக்காத்தான் ராக்யாட் தெரிவித்துள்ளது. "பிஎன் வாக்குகளை வாங்கும் இறுதிக் கட்டத்தில் இறங்கியுள்ளதுடன் அந்நியத் தொழிலாளர்களையும் அமர்த்தியுள்ளதுடன் அழியக் கூடிய மையையும் பயன்படுத்துகின்றது," என டிஏபி…
பக்காத்தானுக்கு இந்தியர் ஆதரவு குறைவாக உள்ளது என யூனிசெல் கருத்துக்…
பிஎன் -னுக்கு இந்தியர் ஆதரவு கூடியிருப்பதாக சொல்லப்படுவதை அண்மையில் யூனிசெல் எனப்படும் Universiti Selangor நடத்திய கருத்துக் கணிப்பு காட்டியுள்ளது. பக்காத்தான் ராக்யாட்டுக்கான மலாய்க்காரர் சீனர் ஆதரவு கூடியுள்ளதற்கான அறிகுறிகள் தென்படும் வேளையில் இந்திய சமூகத்தின் போக்கு அதற்கு நேர்மாறாக உள்ளதை அந்த ஆய்வு காட்டியுள்ளது. சிலாங்கூரைச் சேர்ந்தவர்களிடம்…
எதிர்க்கட்சிகளின் ‘Ubah’ சுலோகத்தை மாயாஜாலம் என நஜிப் நிராகரிக்கிறார்
எதிர்க்கட்சிகளின் 'Ubah' சுலோகம் மக்கள் கவனத்தை பெறுவதற்கான எதிர்க்கட்சிகளுடைய மாயாஜாலம் என்று நஜிப் அப்துல் ரசாக் நிராகரித்துள்ளார். அதற்கு பலியாகி விட வேண்டாம் என அவர் மக்களுக்கு அறிவுரை கூறினார். உண்மையில் அந்த சுலோகத்திற்கு பின்னணியில் உள்ள அமிழ்தம் எனக் கூறப்படுவது உண்மையில் விஷம் என பராமரிப்பு அரசாங்கப்…
‘பக்காத்தான்- சுலு ஊடுருவல் தொடர்புகளை தற்காப்பு அமைச்சர் நிரூபிக்க வேண்டும்’
லாஹாட் டத்து ஊடுருவலுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் உடந்தையாக இருந்ததாக தாம் சொல்வதை தற்காப்பு அமைச்சர் முகமட் ஸாஹிட் ஹமிடி நிரூபிக்க வேண்டும் அல்லது வாயை மூடிக் கொள்ள வேண்டும் என பாஸ் கட்சி இன்று வலியுறுத்தியுள்ளது. "அவரிடம் ஆதாரம் இருந்தால் அவர் அதனைக் காட்ட வேண்டும். வெறுமனே ஊதக்…
பெரும் கூட்டங்கள் நெகிரி செம்பிலானை பக்காத்தான் கைப்பற்றப்போவதை காண்பித்தது
திங்கள்கிழமை இரவு சிரம்பானில் டிஏபி செராமாவுக்குத் திரண்ட மாபெரும் கூட்டம், மே 5 தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் சிரம்பானிலும் ராசாவிலும் வெல்லும் என்பதை மட்டுமல்ல அது மாநில ஆட்சியைக் கைப்பற்றப்போவதையும் காண்பித்தது என்கிறார் நெகிரி செம்பிலான் டிஏபி தலைவர் அந்தோனி லொக். அன்றிரவு சிரம்பான் மார்கெட்டுக்கு எதிரில் டிஏபியின்…
சாபாவில் 11 நாடாளுமன்றத் தொகுதிகளை வெல்ல பக்காத்தான் நம்பிக்கை
சாபாவில் பல இடங்களில் பல்முனை போட்டிகளை எதிர்நோக்கினாலும் குறைந்தது 11 நாடாளுமன்றத் தொகுதிகளையாவது கைப்பற்ற முடியும் என்று சாபா பக்காத்தான் திடமாக நம்புகிறது. செய்தியாளர்களிடம் பேசிய சாபா டிஏபி தலைவர் ஜிம்மி வோங், இப்போது கைவசமுள்ள கோட்டா கினாபாலு, துவாரான், பியுஃபோர்ட் ஆகியவற்றைத் தக்கவைத்துக்கொள்வதில் பிரச்னை இருக்காது என்று…
பக்கத்தானில் இந்தியர்களுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும்?
நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் கலைக்கப்பட்டு விட்டன. தேர்தல் ஆணையம் எதிர்வரும் புதன்கிழமை நடத்தவிருக்கும் கூட்டத்தில் பொதுத் தேர்தல் நடத்துவதற்கான அதன் திட்டங்கள் குறித்து முடிவெடுக்கும். ஆக, அனைத்தும் பொதுத் தேர்தலை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன. 13 ஆம் பொதுத் தேர்தலில் மோத விருக்கும் பாரிசான் மற்றும் பக்கத்தான் கூட்டணிகள்…
டிஏ ஆய்வு நிறுவனம்: பக்காத்தான் வெற்றி என்பது குறுகிய கால…
அரசாங்க மாற்றம் பங்குச் சந்தையில் 'இழப்பை' தரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். ஆனால் பக்காத்தான் ராக்யாட் கொள்கைகள் வெற்றிகரமாக அமலாக்கப்பட்டால் பொருளாதாரம் மீது சாதகமான விளைவுகள் ஏற்படும் என டிஏ ஆய்வு நிறுவனம் சொல்கிறது. "பக்காத்தன் தெரிவித்துள்ள நடவடிக்கைகள் அவற்றின் நோக்கங்களில் வெற்றி கண்டு வாக்குறுதி அளிக்கப்பட்ட விளைவுகளை அளித்தால்…
மாற்றம் காண நாம்தான் மாற வேண்டும்!
பொதுவாகவே அறிவு ஜீவிகளின் கவலை விசித்திரமானது. அவர்கள் முடிவு எடுக்கும் முன் மிகவும் குழம்புவார்கள். எளிய மனிதர்கள் தங்கள் மனசாட்சியின் அடிப்படையில் முடிவு எடுக்கிறார்கள். அவர்களுக்கு உண்மை தெரிகிறது. விழிப்புடன் சமுதாயத்தைப் பார்க்கிறார்கள். அதன் அடிப்படையில் செம்பருத்தி.கொம் எளிய மனிதர்களை நோக்கி ஒரு நேர்காணலை மேற்கொண்டது. (காணொளியை பார்வையிட…
பக்காத்தான் கொள்கை அறிக்கைக்கு ‘சித்திர விளக்கம்’
கேலிச்சித்திர ஓவியர்கள் ஒரு குழுவாக அமைந்து பக்காத்தானின் தேர்தல் கொள்கை அறிக்கையைச் விளக்கச் சித்திரங்களாக்கி நாடு முழுக்கக் கொண்டு செல்வர். “நாங்கள் அனைவரும் சுயேச்சையாக செயல்படும் கேலிச் சித்திர ஓவியர்கள். தனிப்பட்ட முறையில்தான் இதைச் செய்கிறோம். பணத்துக்காக செய்யவில்லை, எந்தவொரு கட்சியும் இதைச் செய்ய வேண்டும் என உத்தரவிடவும்…
‘10 இடங்கள் பெரும்பான்மையில் வெல்வோம்’ : அன்வார் ஆருடம்
எதிர்வரும் பொதுத் தேர்தலில், பக்காத்தான் ரக்யாட் நாடாளுமன்றத்தில் 10-க்கும் கூடுதலான இடங்கள் பெரும்பான்மையில் வெல்வதுடன் நாட்டின் 13 மாநிலங்களில் குறைந்தது ஆறைக் கைப்பற்றும் என்று நம்புகிறார் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம். ஆட்சி ஏற்கும் நாளில், பக்காத்தான் செய்தித்தாள் உரிமங்கள் பெறுவதற்குள்ள கட்டுப்பாடுகளை நீக்கி தாராளமயமாக்கும். இன்று…
மலாக்கா பக்காத்தான் செராமாவின் போது வன்முறை
அரசியல் வன்முறைகள் தொடருகின்றன. நேற்றிரவு மலாக்கா புக்கிட் கட்டில் நடந்த செராமா ஒன்றுக்கு அம்னோ குண்டர்கள் எனக் கூறப்பட்டவர்கள் இடையூறு செய்த போது பக்காத்தான் ராக்யாட் ஆதரவாளர் ஒருவர் காயமடைந்தார். கல் ஒன்றினால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பின்னர் ஒர் ஆடவருடைய தலையிலிருந்து ரத்தம் கசியும் படத்தை பக்காத்தான் ஆதரவாளர்கள்…
கொள்கை அறிக்கையில் 3 மாநிலங்கள் விடுபட்டு விட்டதை பக்காத்தான் ஒப்புக்…
பெட்ரோனாஸிடமிருந்து முழு எண்ணெய் உரிமப் பணம் பெற வேண்டிய மாநிலங்களில் கிளந்தான், திரங்கானு, பாகாங் ஆகியவையும் அடங்கும் என்பதை குறிப்பிடாமல் விட்டு விட்டதை பக்காத்தான் ராக்யாட் இன்று ஒப்புக் கொண்டுள்ளது. "அது தவறாகும். சபா, சரவாக் மட்டுமின்றி எண்ணெய் உற்பத்தி செய்யும் மாநிலங்களும் என அது வாசிக்கப்பட வேண்டும்,"…
பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையில் உள்ள முக்கிய 10 அம்சங்கள்
13வது பொதுத் தேர்தலுக்கான பக்காத்தான் ராக்யாட் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் இன்று அறிவிக்கப்பட்டன. ஆளும் பிஎன் கூட்டணிக்கு முன்னதாக அது தனது தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது. "மக்கள் ஒப்பந்தம் மக்கள் நம்பிக்கை" என அந்த ஆவணத்துக்கு தலைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புக்கு ஜிங்காவில் மூன்று பக்காத்தான் கட்சிகளும்…
பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் அரசு நடவடிக்கைகளில் ஏமாற்று வேலை நடந்துள்ளதா…
பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால், நடப்பு அரசாங்கம் தனியார் நிறுவனங்களுடன் செய்துகொaண்ட ஒப்பந்தங்களில் குறுக்கிடாது என்று மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார். ஆனால், அங்கீகாரம் கொடுக்கப்பட்டதில் ஏமாற்று வேலை நடந்துள்ளதா என்பதை ஆராயும். அந்த விசயத்தில் விட்டுக்கொடுக்க முடியாது, ஏனென்றால் அப்படி செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் நியாயமானவை அல்ல,…
இட ஒதுக்கீடுகள் மீதான பேச்சுக்களை இந்த வாரம் பக்காத்தான் நிறைவு…
பக்காத்தான் ராக்யாட் தேர்தல் கொள்கை அறிக்கை இன்று வெளியிடப்படவிருக்கும் வேளையில் இட ஒதுக்கீடுகள் மீதான பேச்சுக்களை இந்த வாரம் நிறைவு செய்ய முடியும் என அது எதிர்பார்க்கிறது. "எங்கள் அடுத்த கூட்டம் புதன் கிழமை நடைபெறும். எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தைப் பிரதமர் கலைக்கக் கூடும் என நாங்கள் எதிர்பார்ப்பதால்…