சிலாங்கூரில் பக்காத்தான் மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றது

selangorபிகேஆர்-டிஏபி-பாஸ் கூட்டணியான பக்காத்தான் ரக்யாட், சிலாங்கூரில் 56 சட்டமன்ற இடங்களில் 46-ஐக் கைப்பற்றி ஆட்சியை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. இந்த 13வது பொதுத் தேர்தலில் பிஎன்னால் 12 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.

அம்மாநிலத்துக்கான முழு முடிவும் வெகு நேரம் கழித்துத்தான் தெரிய வந்தது. ஆகக் கடைசியாக அறிவிக்கப்பட்டது சுங்கை பினாங் சட்டமன்றத்துக்கான முடிவு. அதிகாலை மணி 4.30க்கு அது அறிவிக்கப்பட்டது.

2008-இல், வென்றதைவிட இம்முறை பக்காத்தான் எட்டு இடங்களைக் கூடுதலாக வென்றுள்ளது.

இம்முறை அது புதிதாக வென்ற இடங்களாவன: கோலா குபு பாரு,  சாபாக்,  டுசும் துவா, ஸ்ரீசெர்டாங்,  தஞ்சோங் சிப்பாட், மொரிப்,  தாமான் டெம்ப்ளர்,  பாயா ஜராஸ்,  செமந்தா,  சுங்கை பீலேக் ஆகியவவையாகும்.

2008-இல், 20 இடங்களை வென்ற பின்னால் இம்முறை 12 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.

ஆனால், ஏற்கனவே தோற்ற இரண்டு இடங்களில் பிஎன் வெற்றி பெற்றது. அவற்றில் ஒன்று புக்கிட் மெலாவாத்தி, இன்னொன்று கோட்டா டமன்சாரா.

நாடாளுமன்றத் தொகுதிகளைப் பொறுத்தவரை, பக்காத்தானும் பிஎன்னும் 2008-இல் எத்தனை இடங்களை வென்றனவோ அதே எண்ணிக்கையிலான இடங்களைத்தான் இந்தத் தேர்தலிலும் வென்றன. இரண்டும் தலா 17 இடங்களைப் பெற்றுள்ளன.

13வது பொதுத் தேர்தல் முடிவு பற்றிக் கருத்துரைத்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அது, ‘சீனர் சுனாமி’யின்  விளைவு என்றார்.

2008-தேர்தலில், சிலாங்கூரை மாற்றரசுக் கட்சி கைப்பற்றியபோது அது  அரசியல்  சுனாமி என்று வருணிக்கப்பட்டது. அதில் பிஎன் மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மையும் இழந்தது.

-பெர்னாமா