பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
விதிமுறைகள் மீறல் : பெர்சே பட்டியலில் சிலாங்கூரும் சேர்ந்துள்ளது
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் பக்காத்தான் ராக்யாட் வழி நடத்தும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் மீறியுள்ளதாகக் கூறப்படும் பல பராமரிப்பு அரசாங்க விதிமுறைகளை பெர்சே பட்டியலிட்டுள்ளது. அவற்றுள் : -நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு அடுத்த நாள் ஏப்ரல் 4ம் தேதி மந்திரி புசார் காலித் இப்ராஹிம் மாநில அரசு ஊழியர்களுக்கு 300…
அரை மில்லியன் புதிய வாக்காளர்களில் 28விழுக்காட்டினரின் அடையாளம் தெரியவில்லை
2008-க்குப் பிறகு சிலாங்கூரில் பதிவுசெய்து கொண்டிருக்கும் 500,000 புதிய வாக்காளர்களில் 28 விழுக்காட்டினரை அடையாளம் காண இயலவில்லை என சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் கூறுகிறார். “வாக்காளர் பட்டியலைச் சுத்தப்படுத்த ஒத்துழைக்கத் தயார் எனத் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதினோம், ஆனால் அவர்கள் அது சிலாங்கூர்…
புத்ராஜெயாவின் கருத்துக்களை புஞ்சாக் நியாகா நாடுகின்றது
சிலாங்கூரில் தண்ணீர் தொழில் நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதற்கு ஈடாக மாநில அரசாங்கம் வழங்க முன் வந்துள்ளது குறித்து, சபாஷ் நிறுவனத்தில் முக்கியப் பங்குதாரர் என்ற முறையில் கூட்டரசு அரசாங்கத்துடன்தான் கலந்தாய்வு செய்ய வேண்டியுள்ளதாக Puncak Niaga Holdings Bhd கூறுகிறது. சிலாங்கூர் அரசாங்கத்தின் சார்பில் KDEB நிறுவனம் அனுப்பிய…
சிலாங்கூர் வழங்குவதை சாதகமாக பார்க்கும் Splash, மேல் விவரங்களைக் கோருகின்றது
சிலாங்கூரில் நீர் வளச் சலுகைகளைப் பெற்றுள்ள நிறுவனங்களில் ஒன்றான Splash எனப்படும் Syarikat Pengeluar Air Selangor Holdings Berhad, தனது நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதற்குச் சிலாங்கூர் மாநில அரசாங்கம் வழங்க முன் வந்துள்ள தொகை குறித்து மேல் விவரங்களை அறிந்து கொள்ள மாநில அரசாங்கத்தைச் சந்திக்கும். மாநில…
தோட்டப்புற இந்திய மாணவர்களுக்கு 5 மில்லியன் செலவில் தங்கும் விடுதி
மலேசிய தோட்டங்களில் வாழும் இந்திய மலேசியர்களின் குழந்தைகள் புதியதோர் சூழ்நிலையில் கல்வி கற்பதற்கு ஏதுவாக அவர்களுக்கு தங்கும் விடுதிகள் கட்ட வேண்டும் என்ற திட்டத்தின் முதல் கட்டமாக சிலாங்கூர் மாநிலத்தில் தோட்டப்புற மாணவர்களுக்கு 5 மில்லியன் செலவில் தங்கும் விடுதி கட்டும் திட்டம் கடந்த சனிக்கிழமை 2-ஆம் அதிகாரப்பூர்வமாக…
மலேசிய வரலாற்றில் தோட்டப்புற இந்திய மாணவர்களுக்கான முதல் தங்கும் விடுதி
மலேசிய தோட்டங்களில் வாழும் இந்திய மலேசியர்களின் குழந்தைகள் புதியதோர் சூழ்நிலையில் கல்வி கற்பதற்கு ஏதுவாக அவர்களுக்கு தங்கும் விடுதிகள் கட்ட வேண்டும் என்ற திட்டத்தின் முதல் கட்டமாக சிலாங்கூர் மாநிலத்தில் தோட்டப்புற மாணவர்களுக்கு தங்கும் விடுதி கட்டும் திட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. சிலாங்கூர் மாநில பக்கத்தான் அரசாங்கம்…
சிலாங்கூர் AES கேமிராக்களை வெள்ளிக் கிழமை அகற்றும்
சிலாங்கூரில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு AES என்ற தானியங்கி அமலாக்க முறை கேமிராக்களைச் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்கள் வெள்ளிக் கிழமை அகற்றும். "அது அகற்றப்படும் நேரத்தை நான் ஊடகங்களுக்குத் தெரிவிப்பேன்," என ஊராட்சி மன்றங்களுக்குப் பொறுப்பான ஆட்சி மன்ற உறுப்பினர் ரோனி லியூ கூறினார். SKVE என்ற தெற்குக் கிள்ளான்…
சாமிவேலுக்கு சிலாங்கூர் பக்காத்தானைக் குறைசொல்ல கொஞ்சமும் தகுதி இல்லை
-மனோகரன் மலையாளம் அண்மைக்காலமாக, மஇகா முன்னாள் தலைவர் சாமிவேலு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பொருளாதார உருமாற்றத் திட்டங்களைப் புகழ்வதையும் சிலாங்கூர் பக்காத்தான் மாநில அரசு எதையும் சாதிக்கவில்லை என்று குறைகூறுவதையும் பார்க்கிறோம். பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளுக்கு மஇகாவின் அம்முன்னாள் தலைவரும் தவறாமல் செல்கிறார். அந்த வகையில், மஇகா…
வோங்: டெம்ப்ளர் பங்களா உரிமையாளர்களில் அம்னோ தலைவர்களும் அடங்குவர்
சிலாங்கூர் மாநிலச் சட்ட மன்றக் கூட்டத்தில் அம்னோ உறுப்பினர்கள் நேற்று எழுப்பிய டெம்ப்ளர் பார்க் என்ற சர்ச்சைக்குரிய திட்டத்தில் உள்ள பங்களா உரிமையாளர்களில் பல அம்னோ தலைவர்களும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அந்தப் பங்களா உரிமையாளர்களில் முன்னாள் அமைச்சர் ஒருவர், எம்பி ஒருவர், பல முன்னாள் மாநிலச் சட்ட மன்ற…
சிலாங்கூரில் ஏஇஎஸ் கேமிராக்களை அகற்ற 14 நாள் காலக் கெடு
சிலாங்கூர் மாநிலத்தில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு தானியங்கி அமலாக்க முறை (ஏஇஎஸ்) கேமிராக்களை அகற்றுவதற்கு மாநில அரசாங்கம் போக்குவரத்து அமைச்சுக்கு இன்று தொடக்கம் 14 நால் காலக் கெடுவை மாநில அரசாங்கம் வழங்கியுள்ளது. அமைச்சு அதனைச் செய்யத் தவறினால் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத்தின் 'துணையுடன்' அந்த கேமிராக்கள் அகற்றப்படும் என…
சிலாங்கூர் ஏஇஸ்-ஸை நிறுத்தியது, சுயேச்சை ஆய்வு தேவை என்கிறது
போக்குவரத்துத் துறை (ஆர்டிடி) அளித்த விளக்கத்தில் திருப்தியுறாத சிலாங்கூர் அரசு, அம்மாநிலத்தில் ஏஇஎஸ் அமலாக்கப்படுவதற்கு அனுமதி வழங்காது என்று மந்திரி புசார் காலிட் இப்ராகிம் கூறியுள்ளார். நேற்று போக்குவரத்துத் துறையின் விளக்கத்தைக் கேட்டபின்னர் மாநில அரசு அம்முடிவுக்கு வந்ததாக காலிட்(இடம்) கூறினார். “நேற்று ஆர்டிடி தலைமை இயக்குனர் சோலா…
சிலாங்கூரில் மஇகா 2 லட்சத்து 35 ஆயிரம் வாக்குகளைக் கொண்டுவரும்…
எதிர்வரும் பதின்மூன்றாவது பொதுத்தேர்தலில் சிலாங்கூர் மாநில தேசிய முன்னணிக்கு மஇகா 2 லட்சத்து 35 ஆயிரம் வாக்குகளைக் கொண்டு வரும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜி. பழனிவேல் கூறியுள்ளார். இந்திய சமூகத்தின் நலனுக்காக பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்துள்ள பல அணுகூலங்களைத் தொடர்ந்து, மேற்கண்ட வாக்குகளை…
பெட்டாலிங் ஜெயா மேயர் திடீர் மாற்றம்
பெட்டாலிங் ஜெயா மேயர் முகம்மட் ரோஸ்லான் சகிமான் 24 மணி நேரத்தில் பணிமாற்றம் செய்யப்பட்டிருப்பது அறிந்து சிலாங்கூர் அரசு வியப்படைகிறது. சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினரும் ஊராட்சி விவகாரங்களுக்குப் பொறுப்பானவருமான ரோனி லியு, தமக்கும் மந்திரி புசார் அலுவலகத்துக்கும் அது பற்றி எதுவும் தெரியாது என்றார். “அது ஐயத்துக்குரியதாகவும் வழக்கத்துக்கு…
அப்துல் அசீஸ்: சிலாங்கூரின் வாக்காளர் தணிக்கை இசி பெயரைக் கெடுக்கும்…
வாக்காளர்களைத் தணிக்கை செய்யும் சிலாங்கூர் அரசின் நடவடிக்கையில் நல்ல நோக்கம் கிடையாது. அது, உண்மையான வாக்காளர்களையும் சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் என்று முத்திரை குத்தி தேர்தல் ஆணைய(இசி)த்தின் பெயரைக் கெடுப்பதை உள்நோக்கமாகக் கொண்டது. இவ்வாறு கூறிய இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப், தம் கூற்றுக்கு ஆதாரமாக அண்மையில்…
முஹைடின்: பிஎன் எடுத்துக் கொள்வதற்கு சிலாங்கூர் தயாராக உள்ளது ஆனால்
சிலாங்கூர் அரசாங்கத்தை பீடித்துள்ளதாக கூறப்படும் பல பிரச்னைகள், அந்த மாநிலம் பிஎன் எடுத்துக் கொள்வதற்குத் தயாராக உள்ளது என்பதற்கான அர்த்தம் என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறுகிறார். அந்தப் பிரச்னைகளில் தலாம் விவகாரமும் தண்ணீர், மணல் சர்ச்சைகளும் அடங்கும் என அவர் சொன்னார். அந்தப் பிரச்னைகள் பக்காத்தான்…
சிலாங்கூர் மாநிலத் தேர்தல் 13வதுபொதுத்தேர்தலின்போது நடத்தப்படாது
மலேசிய தேர்தல் வரலாற்றில் நீண்டகாலமாக இருந்துவரும் பாரம்பரியத்தை உடைத்தெறியும் வகையில் சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தல் தனியாக நடத்தப்படும்.அது, பொதுத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படாது. பக்காத்தான் தலைமைத்துவ மன்றம் இன்று அதன் கூட்டத்தில் இம்முடிவைச் செய்தது.மாநில வாக்காளர் பட்டியலில் சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பது “தீராத பிரச்னையாகவுள்ளது”, என்றது கூறியது.…
லங்காட் 2:சிலாங்கூர் அதன் கைவரிசையைக் காண்பிக்கிறது
சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், புத்ரா ஜெயா ஒப்புதலின்றி லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு ஆலை கட்ட முயன்றால் தம் நிர்வாகம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரித்துள்ளார். அத்திட்டத்துக்கு மாநில அரசில் ஒப்புதல் அவசியம் என்று காலிட்(இடம்) கூறினார். “கூட்டரசு அரசமைப்பு மற்றும் தேசிய…
இலவச நீர் விநியோகம் தொடர்பில் சிலாங்கூர் அரசு மீது 711…
சிலாங்கூர் மாநில அரசாங்கம் அமல் செய்துள்ள இலவச தண்ணீர் விநியோகம் தங்களுக்குக் கிடைக்காதது குறித்து மொத்தம் 711 பயனீட்டாளர்கள் மூன்று தரப்புக்களிடமிருந்து 500,000 ரிங்கிட் இழப்பீடு கோரி வழக்குத் தொடுத்துள்ளனர். அந்த மூன்று தரப்புக்களில் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிமும் ஒருவர் ஆவார். சிலாங்கூர் அரசாங்கம்,…
வோங்: சிலாங்கூர் விரைவில் வாக்காளர் கணக்காய்வுகளை வெளியிடும்
சிலாங்கூரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் கணக்காய்வு முடிவுகளை மாநில அரசாங்கம் இன்னும் இரண்டு வாரங்களில் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் வெளியிடுவார் என மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் எலிசபத் வோங் தெரிவித்துள்ளார். "நாங்கள் அனைத்து மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளிலும் ஆய்வுகளை நடத்தினோம். அது மாறுபட்ட தகவலாக இருக்கும்," என்றார்…
மந்திரி புசார்: கிர், சுல்தானை எப்போதும் அழைத்ததற்கான ஆதாரம் இல்லை
2003ம் ஆண்டுக்கு பின்னர் மெர்தேக்கா தினத்துக்கு முந்திய நாள் கொண்டாட்டங்களில் கௌரவ விருந்தினராக கலந்து கொள்ளுமாறு சுல்தானை முன்னைய சிலாங்கூர் அரசாங்கம் அழைத்ததற்கான பதிவேடுகள் ஏதுமில்லை என சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் கூறுகிறார். 2003ம் ஆண்டுக்குப் பின்னர் 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி ஊர்வலத்துடன்…
சிலாங்கூர் மெர்தேக்கா ‘சர்ச்சை’: பதில் அளிக்க மாநிலச் செயலாளரே சரியான…
சிலாங்கூர் மாநிலச் செயலாளர் முகமட் குஸ்ரின் முனாவி, மாநில மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்களுக்கு சுல்தான் அழைக்கப்பட்டாரா இல்லையா என்பதை விளக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்தக் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாட்டுக் குழுத் தலைவரான குஸ்ரினே அந்த விவகாரத்தை விளக்குவதற்குப் பொருத்தமான மனிதர் என சிலாங்கூர் பாஸ் இளைஞர் துணைத்…
சிலாங்கூர் மெர்தேக்கா தின ஊர்வலத்திலிருந்து போலீசும் இராணுவமும் விலகிக் கொண்டன
நேற்றிரவு நடைபெற்ற சிலாங்கூர் தேசிய நாள் ஊர்வலத்தில் பங்கு கொள்வதிலிருந்து அரச மலேசியப் போலீஸ் படையும் மலேசிய ஆயுதப் படைகளும் விலகிக் கொண்டன. அந்த நிகழ்வில் பேசுவதற்கு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அனுமதிக்கப்பட்டதே அதற்குக் காரணம் என அவை கூறிக் கொண்டன. போலீஸ் படை விலகிக்…
பக்காத்தான் விரும்பினால் சிலாங்கூர் கட்சித்தாவல்-தடுப்புச் சட்டம் கொண்டுவரும்
பக்காத்தான் ரக்யாட் உயர்தலைவர்கள் அனுமதித்தால் கட்சித்தாவல்-தடுப்புச் சட்டம் கொண்டுவருவது பற்றி சிலாங்கூர் பரிசீலிக்கும். அது ஒரு “அரசியல் விவகாரம்” என்றுரைத்த மந்திரி புசார் காலிட் இப்ராகிம், இப்போதைக்கு அதனினும் முக்கியமான விவகாரங்கள் இருப்பதாக ஷா ஆலமில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார். முக்கியமாக 13வது பொதுத் தேர்தலின் வேட்பாளர் பட்டியலில்…