சிலாங்கூர் வழங்குவதை சாதகமாக பார்க்கும் Splash, மேல் விவரங்களைக் கோருகின்றது

waterசிலாங்கூரில் நீர் வளச் சலுகைகளைப் பெற்றுள்ள நிறுவனங்களில் ஒன்றான Splash எனப்படும் Syarikat Pengeluar Air Selangor Holdings Berhad, தனது நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதற்குச் சிலாங்கூர் மாநில அரசாங்கம் வழங்க முன் வந்துள்ள தொகை குறித்து மேல் விவரங்களை அறிந்து கொள்ள மாநில அரசாங்கத்தைச் சந்திக்கும்.

மாநில அரசாங்கம் வழங்க முன் வந்துள்ளதை ‘சாதகமாக’ கருதுவதாக அடையாளம் தெரிவிக்க விரும்பாத Splash அதிகாரி ஒருவர் கூறினார். அதனால் 40 விழுக்காடு கமுடாவுக்குச் சொந்தமான அந்த நிறுவனத்துக்கு 743 மில்லியன் ரிங்கிட் ரொக்கம் கிடைக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

“கடன் பொறுப்புக்களுக்கு மேலாக சொத்து மதிப்பைக் காட்டிலும் கூடுதலாக வழங்குவது தொடர்பான விதி தொடர்பில் நாங்கள் கூடுதல் விவரங்களைக் கோருகிறோம்,” என்றார் அவர்.

Splash-ன் நீர் வளச் சொத்துக்களையும் அதன் பங்குகளையும் எடுத்துக் கொள்வதற்கு மாநில அரசாங்கம் 1.83 பில்லியன் ரிங்கிட் கொடுக்க முன் வந்துள்ளது. அது ஆண்டுக்கு அதன் பங்கு மீது 12 விழுக்காடு ஆதாயத்திற்கு சமமாகும். தற்போது அது அனுபவித்து வருகின்ற ஆதாயத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் கூறியுள்ளார்.

Splash, Abass என்ற  Konsortium Abass Sdn Bhd,  Puncak Niaga Sdn Bhd, Syabas என்ற Syarikat Bekalan Air Selangor Sdn Bhd ஆகிய நீர் வளச் சலுகைகளைப் பெற்றுள்ள நிறுவனங்களின் நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதற்கு சிலாங்கூர் அரசாங்கம் மொத்தம் 9.65 பில்லியன் ரிங்கிட் வழங்க முன் வந்துள்ளது.

2009ம் ஆண்டுக்குப் பின்னர் அது வழங்க முன் வந்துள்ள நான்காவதும் பெரிய தொகையும் ஆகும். Syabas, 70 விழுக்காடு Puncak Niaga Holdings Bhd-க்குச் சொந்தமானதாகும்.

TAGS: