லங்காட் 2:சிலாங்கூர் அதன் கைவரிசையைக் காண்பிக்கிறது

சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், புத்ரா ஜெயா ஒப்புதலின்றி லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு ஆலை கட்ட முயன்றால் தம் நிர்வாகம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரித்துள்ளார்.

அத்திட்டத்துக்கு மாநில அரசில் ஒப்புதல் அவசியம் என்று காலிட்(இடம்) கூறினார்.

“கூட்டரசு அரசமைப்பு மற்றும் தேசிய நிலச் சட்டம் ஆகியவை மாநில அரசுக்கு அதற்கான அதிகாரத்தை வழங்குவதைக் குத்தகையாளர்களுக்கும் மத்திய அரசுக்கும் மாநில அரசு விரும்புகிறது.

“மாநில அரசு அதன் பொறுப்புகளை நிறைவேற்றும்”, என காலிட் மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார். 

இவ்விவகாரத்தில் மாநில அரசுக்குள்ள அதிகாரங்களை விவரித்து மாநிலச் சட்ட ஆலோசகரும் மற்ற வழக்குரைஞர்களும் விரைவில் அறிவிக்கை வெளியிடுவார்கள் என்றாரவர். 

இதனிடையே, மத்திய அரசு சிலாங்கூர் எதிர்த்தபோதிலும் லங்காட் 2 நீர்சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் திட்டத்தைத் தொடர்வதில் உறுதியாக உள்ளது.அத்திட்டத்துக்கு டெண்டர்கள் சமர்ப்பிக்குமாறு அது கேட்டுக்கொண்டிருக்கிறது.

நவம்பர் 30-க்குள் டெண்டர்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

டெண்டர் தொடர்பான ஆவணங்கள் ரிம10,000 விலையில் நாளை முதல் கிடைக்கும்.

TAGS: