மலேசிய தேர்தல் வரலாற்றில் நீண்டகாலமாக இருந்துவரும் பாரம்பரியத்தை உடைத்தெறியும் வகையில் சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தல் தனியாக நடத்தப்படும்.அது, பொதுத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படாது.
பக்காத்தான் தலைமைத்துவ மன்றம் இன்று அதன் கூட்டத்தில் இம்முடிவைச் செய்தது.மாநில வாக்காளர் பட்டியலில் சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பது “தீராத பிரச்னையாகவுள்ளது”, என்றது கூறியது.
பினாங்கும் மாநிலத் தேர்தலைத் தனியே நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்திருப்பதாகக் கூறிய பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், மன்றம் அதற்கும் அனுமதி வழங்கலாம் என்றார்.
“வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் சீரமைக்கவில்லை என்பதால் பொதுத் தேர்தலுடன் சேர்ந்து நடத்தாமல் மாநிலத் தேர்தலைத் தனியே நடத்த (சிலாங்கூர்)மந்திரி புசார் விருப்பம் கொண்டிருப்பதை ஏற்கிறோம்.
“சிலாங்கூரிலும் (கோலாலம்பூர்)கூட்டரசு பிரதேசத்திலும், பினாங்கிலும் (சந்தேகத்துக்குரிய) வாக்காளர்கள் ஆயிரக்கணக்கில் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.அதை இசி சரிசெய்யவில்லை என்பதால் கவலையுறுகிறோம்”.
கிளந்தானில் பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி,அடுத்த தேர்தலைப் பொதுத் தேர்தலுடன் சேர்த்து நடத்த மந்திரி புசார் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்றார்.
“கெடாவைப் பொருத்தவரை மந்திரி புசாரிடமிருந்து இதுவரை பின்னூட்டம் எதுவும் கிடைக்கவில்லை”.